Home
Tablets

தேதிய குறிச்சு வச்சிக்கோங்க.. ஏப்ரல் 28.. முதல் முறையா இந்தியாவுல அறிமுகமாகும் புதிய OnePlus தயாரிப்பு!

இந்திய சந்தையில் டேப்லெட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முதல் மற்றும் லேட்டஸ்ட் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட்டின் (OnePlus Pad) இந்திய அறிமுக தேதி மற்றும் விலை விவரங்கள் லீக் ஆகியுள்ளது.

உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் ஆனது ஒன்பிளஸின் க்ளவுட் 11 (Cloud 11) வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்றும், இது ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மற்றும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G) உடன் அறிமுகமானது என்றும், இருப்பினும் இதன் இந்திய விலை மற்றும் அறிமுக தேதி மட்டும் இன்னும் மர்மமாகவே உள்ளது என்றும்!

OnePlus Pad இந்திய விலை மற்றும் அறிமுக தேதி வெளியானது!

இதற்கிடையில் தான், ஒன்பிளஸ் பேட்டின் இந்திய விலை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த லீக் தகவல் வெளியாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இது வருகிற ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 30 க்கு இடையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இது ரூ.23,099 என்கிற ஆரம்ப விலையில் வெளியிடப்படலாம்.

டிசைனை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் மிகவும் மெல்லிய மற்றும் இலகுரக டேப்லெட் ஆகும், அளவீட்டில் இது வெறும் 6.54 மிமீ தடிமனையும், எடையில் 552 கிராமையும் கொண்டுள்ளது. மெட்டல் பாடியுடன் (Metal Body) வரும் இந்த டேப்லெட்டில் 2.5டி கர்வ்டு எட்ஜ் கிளாஸ் டிசைன் உடனான 11.61 இன்ச் டிஸ்பிளே உள்ளது. அது 144Hz வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட்டையும் ஆதரிக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் (MediaTek Dimensity 9000 SoC) மூலம் இயக்கப்படும் இந்த ஒன்பிளஸ் பேட் ஆனது 5ஜி கனெக்டிவிட்டியையும் (5G Connectivity) ஆதரிக்கிறது. இருப்பினும், இந்த டேப்லெட் செல்லுலார் கனெக்டிவிட்டி சப்போர்ட் (Cellular connectivity support) உடன் வராது.

8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5 ரேம் உடன் வரும் ஒன்பிளஸ் பேட் 128ஜிபி அல்லது 256ஜிபி UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 வேரியண்ட்களில் வாங்க கிடைக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜென் 13.1 (Oxygen 13.1 OS) உடன் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட்டில் 13 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா மற்றும் செல்பீகள் அல்லது வீடியோ கால்களுக்காக சிங்கிள் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. சுவாரசியமாக இதன் ரியர் கேமராவானது 30fps வேகத்தில் 4கே வீடியோக்களை (4K Video) பதிவு செய்யும் திறன் கொண்டது.

டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டால்பி அட்மோஸை (Dolby Atmos) ஆதரிக்கும் இந்த டேப்லெட் சிறந்த ஆடியோவிற்கான குவாட்-ஸ்பீக்கர் செட்டப்பையும் (Quad Speaker Setup) கொண்டுள்ளது. இது 9510mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, ஒன்பிளஸ் பேட் ஆனது இதே விலைப்பிரிவில் (அதாவது ரூ.25,000 க்குள்) வாங்க கிடைக்கும் சியோமி (Xiaomi), லெனோவோ (Lenova) மற்றும் சாம்சங்கின் (Samsung) டேப்லெட்களை சிதற விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மலிவு விலையில் ஹை-எண்ட் டேப்லெட்டை தேடும் நுகர்வோருக்கு இதுவொரு சிறந்த தேர்வாக அமையும்!

Best Mobiles in India

English summary
First OnePlus Tablet OnePlus Pad Launch Date in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X