11-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எஃப்இ.!
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் கேலக்ஸி எஸ்8 டேப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்8, கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்8 எஃப்இ மாடல்களை தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கேலக்ஸி எஸ்8 டேப் எஃப்இ
இந்நிலையில் கேலக்ஸி எஸ்8 டேப் எஃப்இ மாடலின் சில அம்சங்கள் அன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி கேலக்ஸி எஸ்8 டேப் எஃஇமாடல் ஆனது 11-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் சிறந்த பாதுகாப்புவசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எக்ஸிநோஸ் 2200 பிராசஸர் வசதியுடன் இந்த கேலக்ஸி எஸ்8 டேப் எஃப்இ மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவரும்.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த கேலக்ஸி எஸ்8 டேப் எஃப்இ மாடல் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 எஃப்இ மாடலில் 6000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பல்வேறு இணைப்புஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சாம்சங் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை
கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல் ஆனது 12.4-இன்ச் WQGA TFT LCD டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2,560 × 1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்வெளிவந்துள்ளது.

குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடலில் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும்உள்ளது. எனவே இயக்கத்திறகு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுஇந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ வைஃபை மாடல் 10,090 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, எஸ் பென்ஆதரவு, டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்டபல ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எஃப்இ மாடல்.


Click it and Unblock the Notifications