Home
Tablets

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடல் ஆனது 12.4-இன்ச் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 2560 பிக்சல் தீர்மானம், எஸ் பெண் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப் எஸ்7 எப்இ மாட

குறிப்பாக கேலக்ஸி டேப் எஸ்7 எப்இ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்,4ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்7 மாடல்.மேலும் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட்

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் ஆனது 10.4-இன்ச் WUXGA TFT டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 × 1200 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஸி டேப் எஸ்6 லைட்

குறிப்பாக இந்த கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் மிகவும் எதிர்பார்த்த 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி உள்ளது எனவேஇயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ன்புறம் 8எம்பி

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலின் பின்புறம் 8எம்பி ஆட்டோஃபோகஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளது.

4ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த சாதனத்தின் சேமிப்பு வசதியைப் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது கேலக்ஸி டேப் எஸ்6 மாடல்.

னம் கூறுகிறது

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலில் 7040எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ பிளேபேக் 13 மணி நேரம் வரை கொடுக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த சாதனத்தில் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் ஆதரவு மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். பின்பு கேலக்ஸி டேப் எஸ்6 மாடலின்எடை 467கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Samsung Galaxy Tab S7 FE: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X