Home
Tablets

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட்.!

ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஒப்போ பேட் எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஒப்போ பேட் மாடலின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ பேட்

ஒப்போ பேட்

ஒப்போ பேட் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொணடு வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய டேப்லெட் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

 பேட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்

ஒப்போ பேட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த சாதனம் மிக அருமையாக பயன்படும். அதேபோல் கலர்ஓஎஸ் 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஒப்போ பேட் சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ பேட்.

ஒப்போ பேட்

6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டு ஒப்போ பேட் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தில் 8080 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த புதிய ஒப்போ சாதனம் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ஏ16கே

ஒப்போ ஏ16கே

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான சாதனம். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளதுஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போன் மாடல்.

ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர்

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் உள்ளது. எனவே துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் 4230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, சூப்பர் பவர் சேவிங் மோட், நைட் ஃபில்டர்கள் மற்றும் ஆப்டிமைஸ் நைட் சார்ஜிங் உள்ளிட்டபல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

ஒப்போ ஏ16கே

ஒப்போ ஏ16கே ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.மேலும் ColorOS 11.1 லைட் சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Oppo Pad smartphone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X