Home
Tablets

தரமான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் நோக்கியா டேப்லெட்.!

நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

 புதிய நோக்கியா டேப்லெட்

புதிய நோக்கியா டேப்லெட்

இந்நிலையில் நோக்கியா நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஆனது வரவிருக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று
தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக நோக்கியா நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் உலகம் முழுதும் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

வலைத்தளத்தில் வெளிவந்த

அதாவது NokiaMob.net வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, நோக்கியா டி20 என்ற பெயரிடப்பட்ட அந்த டேப்லெட் மாடல் 10.36-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு இந்த டேப்லெட் சாதனத்துடன் அதிநவீன நோக்கியா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோடெயின்மென்ட்

கல்வி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் பயன்பாடுகளுக்கு தகுந்தபடி இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த டேப்லெட் சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கூறப்படுகிறது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம்

நோக்கியா டி20 டேப்லெட் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 டேப்லெட் மாடல் வெ

வைஃபை மற்றும் எல்டிஇ வகைகளில் இந்த நோக்கியா டி20 டேப்லெட் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் மாடல் நம்பர் TA-1392 என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த டேப்லெட் சாதனம் நீலம், கருப்பு நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்கும் சில்லறை

இங்கிலாந்தில் இருக்கும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி இந்த நோக்கியா டேப்லெட் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.21,000 இருக்கும் என்று தெவித்துள்ளனர். மேலும் இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா சி30

நோக்கியா சி30

நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் அக்டோ-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 720x1600பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.அதேபோல் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் சென்சார் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 5எம்பி செல்பீ கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்ளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். அதேபோல் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.8,690-ஆக உள்ளது. இந்த சாதனம் இப்போது சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில்இந்தயாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Expected features of the upcoming Nokia T20 Tablet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X