Home
Tablets

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் லெனோவா டேப் எம்8.!

லெனோவா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விட டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி இந்நிறுவனம் விரைவில் லெனோவா டேப் எம்8 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த சாதனம் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகிள் பிளே கன்சோல்

கூகிள் பிளே கன்சோல் பட்டியலில் (3 வது- ஜெனரல்) லெனோவா டிபி -8506 எஃப் மாடல் எண்ணுடன் லெனோவா டேப் எம்8 காணப்படுகிறது.மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

லெனோவா டேப் எம்8 மாடல் ஆனது மீடியாடெக் MT8768WT பிராசஸர் உடன் ஆக்டோ-கோர் 4ஜி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

1280 x 800 பிக்சல் தீர்மானம்

1280 x 800 பிக்சல் தீர்மானம்

இந்த புதிய சாதனம் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1280 x 800 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக 8-இன்ச் பேனல் வசதியுடன் லெனோவா டேப் எம்8 மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 3ஜிபி ரேம் மற்றும்

லெனோவா டேப் எம்8 மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த புதிய டேப்லெட் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

லெனோவா டேப் எம்8 மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

லெனோவா டேப் எம்8 மாடலில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Expected Features Of The Upcoming Lenovo Tab M8 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X