Home
Tablets

ரூ.10,000-க்கு கீழ் அட்டகாசமான Tablet வேண்டுமா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டேப்லெட் மாடல்களை பயனபடுத்த துவங்கிவிட்டனர். அதேபோல் பெரிய டிஸ்பிளே மற்றும் அட்டகாசமான கேமராக்கள், தனித்துவமான சிப்செட் ஆதரவுடன் டேப்லெட் மாடல்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளன.

 இந்தியா

குறிப்பாக இந்தியாவில் லெனோவா, சாம்சங், ரியல்மி, டிசிஎல் ஆகிய நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு டேப்லெட் சாதனங்களைஅறிமுகம் செய்கின்றன. குறிப்பாக போன்களை விட இதுபோன்ற டேப்லெட் மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் லேப்டாப் மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

1.சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

1.சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை குறைந்த விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல் 8.7-இன்ச் WXGA+ டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1340 X 800 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

கேலக்ஸி டேப் ஏ7 லைட் கேமரா

கேலக்ஸி டேப் ஏ7 லைட் கேமரா

அதேபோல் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது. பின்பு மீடியாடெக் எம்டி8768டி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5100 எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல். எனவே இந்த டேப்டெல் மாடலை நம்பி வாங்கலாம்.

2.லெனோவா டேப் எம்8

2.லெனோவா டேப் எம்8

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட லெனோவா டேப் எம்8 மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,919-விலையில் வாங்க முடியும். மேலும் 8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1280 x 800 பிக்சல்ஸ், ஆண்ட்ராய்டு வி9 இயங்குதளம், 8எம்பி ரியர் கேமரா, 2எம்பிசெல்பீ கேமரா போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்8 மாடல்.

குறிப்பாக இந்த லெனோவா டேப் எம்8 மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட் மாடல்.

 3. லெனோவா டேப் எம்7

3. லெனோவா டேப் எம்7

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட லெனோவா டேப் எம்8 மாடலின் விலை ரூ.7,524-ஆக உள்ளது. குறிப்பாக மீடியாடெக் எம்டி8166 சிப்செட், ஆண்ட்ராய்டு வி11 இயங்குதளம் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப் எம்7மாடல்.

அதேபோல் இந்த லெனோவா டேப்லெட் மாடலில் 5எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா, 7-இன்ச் எச்டி டிஸ்பிளே உள்ளிட்ட தரமான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4.FUSION5 4G  டேப்லெட்

4.FUSION5 4G டேப்லெட்

FUSION5 4G டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,899-விலையில் வாங்க முடியும். இந்த அசத்தலான டேப்டெல் ஆனது 2ஜிபி ரேம், 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 9.6-இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் 8எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு வி8.1 இயங்குதளம், குவாட்-கோர் ஏ53 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது FUSION5 4G டேப்லெட்.

5.ஏசர் One 8 T4-82L

5.ஏசர் One 8 T4-82L

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஏசர் One 8 T4-82L மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஏசர் டேப்லெட் ஆனது மீடியாடெக் 8766WA குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு வி10 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, 1280x800 பிக்சல்ஸ், 8எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஏசர் One 8 T4-82L டேப்லெட்.

6.டிசிஎல் டேப் 10எஸ்

6.டிசிஎல் டேப் 10எஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டிசிஎல் டேப் 10எஸ் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,975-விலையில் வாங்க முடியும். இந்த டிசிஎல் டேப்லெட் ஆனது 8000 எம்ஏஎச் பேட்டரி, ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர் மற்றும் 10.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

7.பானாசோனிக் டேப் 8

7.பானாசோனிக் டேப் 8

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட பானாசோனிக் டேப் 8 மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் 8-இன்ச் டிஸ்பிளே, 5100 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், மீடியாடெக் ஆக்டோ-கோர் பிராசஸர், 5100 எம்ஏஎச் பேட்டரிஉள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Best Tablets Under Rs.10,000 in India: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X