Home
Tablets

ரூ.20,000 போதும்.. 11-இன்ச் டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. டாப் 5 பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்.. இதோ பட்டியல்..

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட டேப்லெட் மாடல்களை பயன்படுத்த சிலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் லெனோவா, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த டேப்லெட் மாடல்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

 ரூ.20,000 போதும்..  டாப் 5 பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்.. இதோ பட்டியல்..

டாப்-1: ஒன்பிளஸ் பேட் கோ(OnePlus Pad Go) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டேப்லெட்

அதேபோல் ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35-இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 8000 எம்ஏஎச் பேட்டரி, 8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

டாப்-2: ஹானர் பேட் எக்ஸ் 9 (HONOR Pad X9) ஆனது அமேசான் தளத்தில் ரூ.16,998-க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக 11.5-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் டேப்லெட்.

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட், 7250எம்ஏஎச் பேட்டரி, 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஹானர் ஹிஸ்டென் (HONOR Histen) டெக்னாலஜி, 5எம்பி செல்பி கேமரா, 5எம்பி ரியர் கேமரா, 7ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ஹானர் பேட் எக்ஸ் 9 மாடல்.

டாப்-3: ரெட்மி பேட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,499 விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 10.61-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், டால்பி அட்மோஸ், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், குவாட் ஸ்பீக்கர்கள், 8000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி பேட்.

டாப்-4: சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.20,999 விலையில் வாங்க முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

 ரூ.20,000 போதும்..  டாப் 5 பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்.. இதோ பட்டியல்..

அதேபோல் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் டேப்லெட் மாடலில் 11.0-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்எம்6375பிராசஸர், 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 5100எம்ஏஎச் பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

டாப்-5: லெனோவா டேப் எம்10 ஃபுல் எச் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,499 விலையில் வாங்க முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். பின்பு 10.1-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, யுனிசாக் டி610 ஆக்டோ-கோர் பிராஸசர், 5100எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best tablets in india under 20000: Here Top 5 List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X