ஆர்டர் போட்ருங்க.. 10200mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த டேப்லெட் மாடல்கள்..
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் பட்ஜெட் விலையில் தரமான சிப்செட் கொண்ட டேப்லெட் மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த டேப்லெட் மாடல்களை (best tablets) இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) எனும் டேப்டெல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த டேப்லெட் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.15999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஹீலியோ ஆக்டோ-கோர் ( Helio G99 octa-core) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட். மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. OxygenOS 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
11.35-இன்ச் 2.4K பிக்சல்ஸ் கொண்ட டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. டால்பி விஷன், எச்டிஆர் பிளஸ் சப்போர்ட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், TuV Rheinland ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.
8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் பேட் கோ மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 33W சூப்பர்வூக் (33W SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 8எம்பி ரியர் கேமரா, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (quad stereo speakers), புளூடூத் 5.3, வைஃபை , ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி காரடுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது லெனோவா டேப் பிளஸ் மாடல். மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்தது. மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
8எம்பி ஆட்டோஃபோகஸ் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட். குறிப்பாக இந்த கேமரா உதவியுடன் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. பின்பு வைஃபை 802.11 ஏசி, யுஎஸ்பி டைப்-சி, புளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த சாதனம் வெளிவந்தது.
லெனோவா டேப் பிளஸ் மாடல் 8600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இது ஒரே சார்ஜில் 12 மணிநேர ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு, 8 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (8 JBL speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
11.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் லெனோவா டேப் பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

லெனோவா டேப் பி12 (Lenovo Tab P12) ஆனது அமேசான் தளத்தில் ரூ.17,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.300 தள்ளுபடியும் உள்ளது.
12.7 இன்ச் எல்டிபிஎஸ் (LTPS) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது லெனோவா டேப் பி12 மாடல். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2944 x 1840 பிக்சல்கள், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 எஸ்ஓசி (MediaTek Dimensity 7050 SoC) சிப்செட், ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ், 10200mAh பேட்டரி, 20W ஃபாஸ்ட் சார்ஜிங், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (Quad JBL Speakers) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லெனோவா டேப் பி12 டேப்லெட் வெளிவந்தது.
8எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 6 (Wi-Fi 6 ) டைப் -சி ஆடியோ (Type-C Audio) உள்ளிட்ட வசதிகளும் லெனோவா டேப் பி12 மாடலில் உள்ளன.

ஹானர் பேட் எக்ஸ் 9 (Honor Pad X9) ஆனது அமேசான் தளத்தில் ரூ.14,999 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 11.5 இன்ச் 2கே டிஸ்பிளே கொண்டுள்ளது ஹானர் டேப்லெட். மேலும் 2000 x 1200 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட், அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு, 7,250mAh பேட்டரி, 5 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பீ கேமரா, 1 மைக், 6 ஸ்பீக்கர்கள், ப்ளூடூத் பிடி5.1 (Bluetooth BT5.1), வைபை 5,801.11 (WIFI 5,802.11) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் ஹானர் பேட் எக்ஸ் 9 மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications