Home
Tablets

ரூ.25,000-க்குள் கிடைக்கும் பெஸ்ட் டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!

தற்போது சாம்சங் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்கின்றன. அதாவது
ஸமார்ட்போன்களை விட பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது டேப்லெட் மாடல்கள். எனவே தான் டேப்லெட் மாடலகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சிறந்த டேப்லெட்

குறிப்பாக மாணவர்களுக்கு இந்த டேப்லெட் மாடல்கள் அதிகமாகவே பயன்படுகிறது. இப்போது இந்தியாவில் ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த
டேப்லெட் மாடல்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

4ஜிபி ரேம் மறறும் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலின் விலை ரூ.20,990-ஆக உள்ளது. குறிப்பாகஇந்த டேப்லெட் மாடலை அமேசானில் வாங்க முடியும். 10.5-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

குறிப்பாக 1920x1200 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
அசத்தலான கேலக்ஸி டேப் ஏ8 மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது இந்த சாம்சங் டேப்லெட் மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 கேமரா

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 கேமரா

UniSOC T618 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல். மேலும் 8எம்பி ரியர்
கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 7040 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை
கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

 லெனோவா டேப் பி11

லெனோவா டேப் பி11

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட லெனோவா டேப் பி11 மாடலை அமேசான் தளத்தில் ரூ.21,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் பிராஸசர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லெனோவா டேப் பி11 டிஸ்பிளே

லெனோவா டேப் பி11 டிஸ்பிளே

லெனோவா டேப் பி11 மாடல் ஆனது 11-இன்ச் TDD ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
ஆதரவைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த லெனோவா டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.

இதுதவிர 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஸ்மார்ட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் ஆதரவு,7500 எம்ஏஎச் பேட்டரி,
பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது லெனோவா டேப் பி11 மாடல்.

நோக்கியா டி20 டேப்

நோக்கியா டி20 டேப்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட நோக்கியா டி20 டேப் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,499-விலையில் வாங்க முடியும்.10.4 இன்ச் 2 கே எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா டி20 டேப்லெட்.

2,000 X 1,200 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், யூனிசாக் டி 610 ப்ராசஸர் மற்றும் மாலி-ஜி 52 ஜிபியு ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பவர் அம்ப்ளிஃபையர், டூயல் மைக்ரோஃபோன்கள் போன்ற தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட்.

 நோக்கியா டி20 டேப் பேட்டரி

நோக்கியா டி20 டேப் பேட்டரி

நோக்கியா டி20 டேப்லெட் ஆனது 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட்.

 ரியல்மி பேட்

ரியல்மி பேட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரியல்மி பேட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,870-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ரியல்மி பேட் ஆனது 10.4-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி பேட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 7100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு
அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ரியல்மி பேட் சிப்செட்

ரியல்மி பேட் சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி பேட் மாடல். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best Tablet Models Under Rs 25,000: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X