ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான டேப்லெட் மாடல்கள்: இதோ பட்டியல்.!
இந்தியாவில் சாம்சங், லெனோவா டேப்லெட் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்கின்றன.

ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் டேப்லெட்
அதேபோல் ஸ்மார்ட்போன்களை விட தற்போது டேப்லெட் மாடல்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இப்போது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான டேப்லெட் மாடல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1.லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,430-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 8-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1280 X 800 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பை கொண்டுள்ளது இந்த சாதனம்.
அதேபோல் மீடியாடெக் ஹீலியோ ஏ22 டேப் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட். மேலும் இந்த மாடல் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட் பேட்டரி
லெனோவா டேப் எம்8 எச்டி டேப்லெட் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப்லெட்.

2.சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
அமேசான் தளத்தில 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.குறிப்பாக இந்த டேப்லெட் 8.7-இன்ச் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் 1340 X 800 பிக்சல்ஸ், டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் 8எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளது. மேலும் 5100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

3.FUSION5 4ஜி டேப்லெட்
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட FUSION5 4ஜி டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,899-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 9.6-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1024x600 பிகச்ல்ஸ் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த டேப்லெட் மாடல்
வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 8 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.
அதேபோல் குவாட்-கோர் ஏ53 பிராசஸர் வசதியை கொண்டு இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4. லெனோவா டேப் எம்7 3rd Gen
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட லெனோவா டேப் எம்7 மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,850-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 7-இன்ச் டிஸ்பிளே, 1024x600 பிக்சல்ஸ், 350 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்
அதேபோல் மீடியாடெக் எம்டி8766 சிப்செட்,ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5எம்பி ரியர் கேமரா, 2எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது லெனோவா டேப்லெட்.

5.Alcatel 1T10 ஸ்மார்ட் டேப்லெட்
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட Alcatel 1T10 ஸ்மார்ட் டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,499 விலையில்
வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
அதேபோல் 10.1-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது Alcatel 1T10 ஸ்மார்ட் டேப்லெட் மாடல். மேலும் 2எம்பி ரியர் கேமரா,
2எம்பி செல்பீ கேமரா, 4080 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த Alcatel 1T10 ஸ்மார்ட் டேப்லெட்.


Click it and Unblock the Notifications