Home
Tablets

ரூ.20,000-க்குள் கிடைக்கும் தரமான டேப்லெட்கள்: இதோ பட்டியல்.!

இந்தியாவில் தற்போது ஸமார்ட்போன்களை விட டேப்லெட் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது மாணவர்கள் அதிகமாக டேப்லெட் வாங்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

 ரியல்மி பேட் எக்ஸ்

ரியல்மி பேட் எக்ஸ்

மேலும் ரியல்மி, சாம்சங், மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அட்டகாசமான டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளன. சரி இப்போதுரூ.20,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான டேப்லெட்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி பேட் எக்ஸ்

ரியல்மி பேட் எக்ஸ்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பேட் எக்ஸ் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.19,899-விலையில் வாங்க முடியும். இந்த டேப்லெட் மாடல் 11-இன்ச் WUXGA+ டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரியல்மி பேட் எக்ஸ் அம்சங்கள்

ரியல்மி பேட் எக்ஸ் அம்சங்கள்

ரியல்மி பேட் எக்ஸ் மாடலில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 8340 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி பேட் எக்ஸ் மாடல்.

ஒப்போ பேட் ஏர்

ஒப்போ பேட் ஏர்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ பேட் ஏர் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.16,899-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 10.36-இன்ச் 2கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 8எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 7100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன்வெளிவந்துள்ளது ஒப்போ பேட் ஏர். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

மோட்டோரோலா  டேப் ஜி62 எல்டிஇ

மோட்டோரோலா டேப் ஜி62 எல்டிஇ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா டேப் ஜி62 எல்டிஇ மாடலை பிளிப்கார்ட் தளத்தில ரூ.17,899-விலையில் வாங்க முடியும்.மேலும் இந்த டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 10.61-இன்ச் 2கே டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 7700 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் எஸ்டிஎம்680 சிப்செட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா டேப்லெட்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த
சாம்சங் டேப்லெட்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 10.5-இன்ச் டிஸ்பிளே, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா, 7040 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, UniSOC T618 பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

Lenovo Tab Yoga Smart டேப்லெட்

Lenovo Tab Yoga Smart டேப்லெட்

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Lenovo Tab Yoga Smart டேப்லெட் மாடலை ரூ.17,698-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் 10.1-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட், 7000 எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பானவசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த Lenovo Tab Yoga Smart டேப்லெட்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Best ANDROID Tablets Under Rs 20,000: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X