இந்தியாவில் வாங்கச் சிறந்த 5G டேப்லெட்கள்: இதோ பட்டியல்.!
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி டேப்லெட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக 5ஜி சேவை மூலம் அதிவேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால் பலரும் 5ஜி சாதனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

குறிப்பாக 5ஜி டேப்லெட்கள் மாணவர்களுக்கு மிகவும் அருமையாகப் பயன்படும் என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் வாங்கச் சிறந்த 5ஜி டேப்லெட் மாடல்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8
5ஜி ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலை அமேசான் தளத்தில் ரூ.50,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட்11-இன்ச் Cinematic டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2560x1600 பிக்சல்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் டேப்லெட்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 ஆனது 13எம்பி மெயின் கேமரா + 6எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 12எம்பி செல்பி கேமரா, 8000 எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட், 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்புஅம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.

ரியல்மி பேட் எக்ஸ்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி பேட் எக்ஸ் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் 11-இன்ச் டிஸ்பிளே, 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் 8340 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி டேப்லெட்.

ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2021 (3rd Generation)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2021 (3rd Generation) மாடலை ரூ.71,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 5ஜி ஆதரவு, 11-இன்ச் டிஸ்பிளே, 12எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி செல்பி கேமரா, ஆப்பிள் எம்1 சிப், தரமான
பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

2021 ஆப்பிள் ஐபேட் மினி
அமேசான் தளத்தில் 2021 ஆப்பிள் ஐபேட் மினி சாதனத்தை ரூ.74,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதாவது 8.3-இன்ச் டிஸ்பிளே, A15 பயோனிக் சிப், 12எம்பி ரியர் கேமரா, 12எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்புஅம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஆப்பிள் ஐபேட் மினி சாதனம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ்
அமேசானில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் மாடலை ரூ.95,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 5ஜி ஆதரவு கொண்ட இந்த டேப்லெட் 12.4-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8-வது ஜென் சிப்செட், 13எம்பி டூயல் ரியர் கேமரா, 12எம்பி செல்பி கேமரா, 10,090 எம்ஏஎச் பேட்டரி
உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் டேப்லெட்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications