விற்பனைக்கு வந்தது தரமான ஆப்பிள் ஐபேட்(2019).!
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் ஐபோன் 11சீரிஸ்,ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களுடன் ஆப்பிள் ஐபேட்(2019) மாடலையும் அறிமுகம் செய்தது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்
தற்சமயம் இந்த ஆப்பிள் ஐபேட்(2019) மாடல் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்பு மற்றும் அருமையான மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஆப்பிள் ஐபேட்(2019) சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

சிப்செட் வசதி
இந்த ஆப்பிள் ஐபேட்(2019) சாதனம் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஆப்பிள் பென்சில் வசதி மற்றும் பல்வேறு மென்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

கேமரா அமைப்பு
ஆப்பிள் ஐபேட்(2019) சாதனம் சாதனத்தின் பின்புறம் 8 எம்.பி. கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர் வசதி உள்ளது. பின்பு 1.2எம்பி முன்புற கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட வசதிகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனத்;தில் 32.4 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், டூயல் மைக்ரோபோன் ஐபேட் ஒ.எஸ். 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 4.2 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

ஆப்பிள் ஐபேட்(2019) விலை
ஆப்பிள் ஐபேட்(2019) 32ஜிபி வைபை மாடலின் விலை ரூ.29,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 128ஜிபி வைபை மாடலின் விலை ரூ.37,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 32ஜிபி வைபை 10 செல்லுலார் மாடலின் விலை ரூ.40,900/-
ஆப்பிள் ஐபேட்(2019) 128ஜிபி வைபை 10 செல்லுலார் மாடலின் விலை ரூ.48,900/-


Click it and Unblock the Notifications