மளமளவென குறைந்த ஒன்பிளஸ் டேப்லெட் விலை.. 11 இன்ச் டிஸ்பிளே.. 9340mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் ஆனது தள்ளுபடி வலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் 11-இன்ச் டிஸ்பிளே, 9340எம்ஏச் பேட்டரி, தரமான ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் பேட் லைட் மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டேப்லெட் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1200 பிக்சல்ஸ், 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியும் இந்த ஒன்பிளஸ் டேப்லெட் மாடலில் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி100 (MediaTek Helio G100) சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1. ( OxygenOS 15.0.1.) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த ஒன்பிளஸ் பேட் லைட் சாதனம் இயங்குகிறது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த டேப்டெல் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
குறிப்பாக 5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா உடன் இந்த புதிய ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோவுடன்(Hi-Res audio) கூடிய குவாட் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

அதேபோல் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் 9340mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP42 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளிவந்துள்ளது.
ப்ளூடூத் 5.2, வைஃபை 5, எஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் டேப்லெட் மாடலின் எடை 530 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








