தீப்பறக்கும் விற்பனை.. 11.5-இன்ச் டிஸ்பிளே.. 13எம்பி கேமரா.. ஆஃபரில் லெனோவா டெப்லெட்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையின் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லெனோவா நிறுவனத்தின் அசத்தலான டேப்லெட் மாடலுக்கும் அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது லெனோவா டேப் பி11 (Lenovo Tab P11) மாடலுக்கு தான் அமேசான் தளத்தில் 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனேவு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லெனோவா டேப் பி11 மாடலை அமேசான் தளத்தில் ரூ.18,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் இப்போது லெனோவா டேப் பி11 மாடலின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 11.5-இன்ச் 2கே ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான டேப்லெட். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.
அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்மார்ட் குவாட் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல். எனவே இந்த டேப்லெட் மாடல் ஆனது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த லெனோவா டேப் பி11 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.
சக்திவாய்ந்த மீடியாடெக் ஜி99 ஆக்டோ-கோர் பிராசஸர் (MediaTek Helio G99 Octa-core Processor) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல். எனவே கேமிங், வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை இந்த டேப்லெட் மாடலின் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மீடியாடெக் ஜி99 ஆக்டோ-கோர் பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 12எல் ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த லெனோவா டேப் பி11 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட் மாடல்.
லெனோவா டேப் பி11 மாடலின் பின்புறம் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்ட 13எம்பி கேமரா உள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல்.
லெனோவா டேப் பி11 ஆனது 7500 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 20 வாட்ஸ் குவிக் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப்லெட்.

கைரேகை ஸகேனர் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் பி11 மாடல். மேலும் வைஃபை 6(Wi-Fi 6), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த லெனோவா டேப் பி11 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் குறைந்த எடையை கொண்டுள்ளது லெனோவா டேப் பி11. கம்மி விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் லெனோவா டேப் பி11 மாடல் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் லெனோவா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான டேப்லெட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு டெப்லெட் மாடலுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








