குழந்தைகளுக்காக அமேசான் நிறுவனத்தின் சிறப்பு டேப்லெட் அறிமுகம்.!

இந்த ஃபயர் எச்.டி 10 மாடலின் முக்கிய அம்சமே இதனுடைய முழு ஸ்க்ரீன் அம்சம்தான். மேலும் இதன் சிறப்பு சார்ஜ் செய்யப்படும் அம்சமும் ஒரு கூடுதல் சிறப்பு.

|

அமேசான் நிறுவனம் இரண்டு புதிய வெர்ஷன்களை ஃபயர் 10 எச்.டி வடிவத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று அனைவரும் பயன்படுத்தும் வகையிலும் ஒன்று குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலுமான டேப்லெட்டுக்கள் ஆகும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியான ஃபயர் எச்.டி 10 மாடல் அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் குழந்தைகள் பயன்படுத்தும் குழந்தை டேப்லெட் மிக அபாரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருடன் அன்லிமிடெட் பயன்படுத்துவது மற்றும் இரண்டு வருஅ வாரண்டியும் இதனுடன் கிடைக்கின்றது. இந்த குழந்தைகள் மாடல் டேப்லெட் ரூ.13650 விலையிலும், அதனுடன் ரூ.3400 அதிகம் கொடுத்தால் அனைவரும் பயன்படுத்தும் மாடல் டேப்லெட்டும் கிடைக்கும்.

குழந்தைகளுக்காக அமேசான் நிறுவனத்தின் சிறப்பு டேப்லெட் அறிமுகம்.!

இந்த ஃபயர் எச்.டி 10 மாடலின் முக்கிய அம்சமே இதனுடைய முழு ஸ்க்ரீன் அம்சம்தான். மேலும் இதன் சிறப்பு சார்ஜ் செய்யப்படும் அம்சமும் ஒரு கூடுதல் சிறப்பு. மேலும் ஃபயர் எச்.டி 10 மாடலின் இரண்டு பிரதிகளூம் பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது என்பது தெரிந்ததே. இதன் முலம் தட்பவெப்ப நிலை, நம்முடைய திட்டங்கள், கேமிரா அனுபவங்கள் மற்றும் சினிமா டிரைலர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். அதுமட்டுமின்றி இந்த டேப்ளட் உங்கள் வாய்ஸ் கண்ட்ரோலை ஏற்றுக் கொள்ளும். மேலும் இதன் மூலம் வீடியோ கால்ஸ் மற்றும் சமையலுக்கு தேவையான சமையல் குறிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.


மேலும் இந்த மாடலின் குழந்தைகள் பதிப்பில் ஒரு பெற்றோர் தங்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை அறிவுகளுக்கு உரிய விஷயங்களை இதன்மூலம் தெரியப்படுத்தலாம். கல்வி சம்பந்தப்பட்ட விஷயம் முதல் பல நல்ல விஷயங்களை தெரியப்படுத்த உதவுவதோடு தேவையில்லாதவற்றை பார்ப்பதையும் கட்டுப்படுத்தலாம். அதேபோல் அதிக நேரம் குழந்தைகள் இந்த டேப்ளட்டை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் கட்டுப்படுத்தும் அம்சமும் இதில் உண்டு. இதனால் குழந்தைகள் வீடியோவில் அதிக நேரம் செலவு செய்வதை தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்காக அமேசான் நிறுவனத்தின் சிறப்பு டேப்லெட் அறிமுகம்.!

குழந்தைகள் தினமும் இந்த டேப்ளட்டில் என்னென்ன பார்த்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் வசதியும் அதன் மூலம் குழந்தைகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும் இதன் மூலம் முடிகிறது. அதேபோல் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள், வீடியோக்கள், இணையதளங்கள், செயலிகள் ஆகியவற்றையும் இதன்மூலம் கற்றுக் கொடுக்கலாம். இந்த இரண்டு வகை டேப்ளட்டுகளும் அலெக்சாவின் சிறப்பான தயாரிப்பு மட்டுமின்றி நமது நேரத்தையும் பயனுள்ளதாக்குகிறது.. புளூடூத் மூலமும் அல்லது வாய்ஸ் சியர்ச் மூலமும் இதனை பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்காக அமேசான் நிறுவனத்தின் சிறப்பு டேப்லெட் அறிமுகம்.!

மேலும் இந்த டேப்ளட்டுகளின் ஹார்ட்வேர் அம்சங்களை பார்த்தோம் என்றால் இதில் மெடியாடெக் பிராஸசருடன் 2ஜிபி ரேம் உள்ளது. மேலும் 64ஜிபி ஸ்டோரேஜ் உள்ள இதில் 3,830mAh அம்சம் உள்ள பேட்டரி உள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் தேவையென்றால் மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தலாம். மேலும் இந்த டேப்லெட்டில் 2எம்பி முன்கேமிரா மற்றும் பின்கேமிரா விஜிஏ சென்சார்களுடன் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு

ஸ்டாண்டர்ட் ஃபயர் எச்.டி 10 மாடல் விலை ரூ.10,300 என்ற விலையிலும் குழந்தைகள் பயன்படுத்தும் மாடல் ஃபயர் எச்.டி 10 விலை ரூ.13,650 என்ற விலையிலும் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Amazon Fire HD 10 Kids Edition launched with full-screen Alexa experience : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X