Home
Tablets

10.1-இன்ச் டிஸ்பிளே.. 13மணி நேரம் பேட்டரி பேக்கப்.. அறிமுகமானது அமேசான் டேப்லெட்.. எந்த மாடல்?

அமேசான் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் புதிய டேப்லெட் மாடல் ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) எனும் டேப்லெட் மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது அமேசான்.

அதேபோல் இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) எனும் டேப்லெட் மாடல் ஆனது தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

10.1-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது அமேசான் டேப்லெட்.. எந்த மாடல்?

அதாவது அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) (Amazon Fire HD 10 (2023)) மாடல் ஆனது 10.1-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆக்டோ-கோர் 2.05ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் (Octa-core 2.05GHz processor) வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடல். எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். எனவே இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக 5எம்பி செல்பி கேமரா மற்றும் 5எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடல். பின்பு இந்த டேப்லெட் மாடல் ஆனது 1080 பிக்சல்ஸ் வீடியோவை பதிவு செய்யும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

3ஜிபி ரேம் + 32ஜிபி மெமரி மற்றும் 3ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த அட்டகாசமான அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடல். மேலும் கூடுதலாக 1டிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த டேப்லெட் மாடலில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடலின் பேட்டரியின் அளவு வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த டேப்லெட் மாடல் 13 மணி நேரம் பேட்டரி பேக்கப் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. பின்பு 9 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே இந்த டேப்லெட் மாடலின் பேட்டரியை சார்ஜ் செய்ய முழுமையாக 4 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

10.1-இன்ச் டிஸ்பிளே.. அறிமுகமானது அமேசான் டேப்லெட்.. எந்த மாடல்?

அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டண்ட், அமேசான் ஸ்டைல் பென் ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) எனும் டேப்லெட். பின்பு யுஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடல் வெளியானது. பின்பு இந்த டேப்லெட் எடை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

பிளாக், லைலாக், ஓசோன் நிறங்களில் அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் ஆரம்ப விலை $139.99 (இந்திய மதிப்பில் ரூ.11,600) ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய அமேசான் ஃபையர் எச்டி 10 (2023) டேப்லெட் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Fire HD 10 (2023) Launched with Amazon Stylus Pen: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X