அட்டகாசம் : கேலக்ஸி ஸ்மார்ட்போனை விடுங்க, விரைவில் கேலக்சி டேப் எஸ்3.!
ஜிஎப்எக்ஸ்பென்ஞ் தரப்படுத்தல் வலைத்தள பட்டியலின்படி, சாம்சங் எஸ்எம்-டி 385 ஆனது 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 5 விரல் சைகை ஆதரவும் உள்ளது.
சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி டேப் எஸ்3 சாதனத்தை முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியிட்டது. தற்போது சாம்சங் மாடல் எண் சாம்சங் எஸ்எம்-டி385 என்ற சாதனம் ஜிஎப்எக்ஸ்பென்ஞ் தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிவிக்கப்படாத இந்த டேப்ளெட் ஆனது சாம்சங் நிறுவனத்தின் அடுத்த புதிய டேப்ளெட் ஆக இருக்கலாம் என்றும் மேலும் அறிக்கைகள் படி, இந்த சாதனம் கேலக்ஸி டேப் 8.0 (2017) என்ற பெயர் கொண்டிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. விரைவில் வெளியாகும் இரு எதிர்பார்க்கப்படும் இந்த கேலக்ஸி டேப் எஸ்3 சாதனத்தின் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
ஜிஎப்எக்ஸ்பென்ஞ் தரப்படுத்தல் வலைத்தள பட்டியலின்படி, சாம்சங் எஸ்எம்-டி 385 ஆனது 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதில் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 5 விரல் சைகை ஆதரவும் உள்ளது.

2 ஜிபி ரேம்
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 435 உடனான 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ப்ராசசர் மற்றும் 2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, இதில் 54 ஜிபி அளவு பயனர்களுக்கான ரிசர்வுடு சேமிப்பும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
மேலும் இந்த சாதனம் அட்ரீனோ 308 ஜிபியூ மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்பதையும் வெளியான பட்டியல் அறிவிக்கிறது. பேட்டரி சார்ந்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

செல்பீ கேமரா
இந்த சாம்சங் டேப்ளெட் ஆனது 8-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் எல்இஇஎல் ப்ளாஷ் ஆகியவற்றை பின்புற பலகத்திலும், முன்பக்கம் 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டிருக்கலாம்.

வைஃபை சான்றிதழ்
ஜிஎப்எக்ஸ் பட்டியலை தவிர்த்து இந்த சாதனமானது வைஃபை சான்றிதழ் ஆன வைஃபை அலியன்ஸ் தளத்திலும் காணப்பட்டுள்ளது. அங்கு இந்த சாதனம் நௌவ்கட் இயக்க முறைமையை உறுதிப்படுத்துகிறது.

ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வைஃபை
தவிர ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வைஃபை போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதாக ஜிஎப்எக்ஸ பட்டியல் சுட்டிக்காட்டுகிறது. பட்டியலின் படி, சாதனம் அக்சேலரோமீட்டர் மற்றும் லைட் சென்சார்கள் கொண்டு உள்ளது.

இரட்டை-பேண்ட் வைஃபை
வைஃபை சான்றிதழ் தளத்தின்படி, சாம்சங் எஸ்எம்- டி385 இரட்டை-பேண்ட் வைஃபை (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகார்ட்ஸ்) மற்றும் வைஃபை நேரடி இணைப்பு அம்சங்கள் ஆகிய ஆதரவை அளிக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 இயக்க முறைமை மூலம் இயக்கப்படும் என்பதைத் தவிர வேறெந்த அப்டேட் குறிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications