பிப்ரவரி 16 : ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிரும் அல்காடெல் பாப் 4.!
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.
பல ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வலைத்தளங்களில் காதலர் தினத்தை முன்னிட்டு குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய வண்ணம் உள்ளனர், மேலும் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு மின்சாதனங்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அல்காடெல் பாப் 4 டேப்லெட் மாடல் வரும் பிப்ரவரி 16-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபிளிப்கார்ட் பட்டியலில், அல்காடெல் பாப் 4 சாதனம் பிப்ரவரி 16-ம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். அதன்பின்பு ஃபிளிப்கார்ட் பிரத்தியேகமா அல்காடெல் பாப் 4 டேப்லெட் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 10-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்:
அல்காடெல் பாப் 4 டேப்லெட் சாதனம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

சேமிப்பு:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இந்த டேப்லெட் மாடலில் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
அல்காடெல் பாப் 4 டேப்லெட் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் 1080பிக்சல் வீடியோ பதிவு ஆதரவுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் 2.0, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


பேட்டரி :
அல்காடெல் பாப் 4 டேப்லெட் சாதனத்தில் 3200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications