Home
Tablets

வெறும் ரூ.9,999-விலையில் அல்காடெல் ஏ3 10 டேப்லெட் மாடல் அறிமுகம்.!

அல்காடெல் ஏ3 10 டேப்லெட் பொறுத்தவரை 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வீடியோ கால், ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த அல்காடெல் ஏ3 10 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது அல்காடெல் நிறுவனம். குறிப்பாக இந்த டேப்லெட் சாதனம் வீடியோ கேம், இணையம், போன்ற பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.9,999-விலையில் அல்காடெல் ஏ3 10 டேப்லெட் மாடல் அறிமுகம்.!

அல்காடெல் ஏ3 10 டேப்லெட் சாதனம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தை இந்தியாவில் இப்போது ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரை:

திரை:

அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த டேப்லெட் ஆனது 1280 x 800 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட 10 அங்குல எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஒரு பணிச்சூழலியல் மிக்க பயனர்களுக்கான வடிவமைப்பை கொண்டுள்ளது அதாவது 9.5மிமீ என்கிற அளவிலான தடிமனை கொண்டுள்ளது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி

இந்த டேப்லெட் ஆனது 1.1ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி8127 செயலி மற்றும் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு கொண்டு இயங்குகிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 64 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கும் ஆதரவும் வழங்குகிறது.

கேமரா:

கேமரா:

அல்காடெல் ஏ3 10 டேப்லெட் பொறுத்தவரை 5எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வீடியோ கால், ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் என அல்காடெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் 4ஜி எல்டிஇ வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த அல்காடெல் டேப்லெட் சாதனத்தில் 4600எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையா இருக்கும் இந்த டேப்லெட் சாதனம். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

விரைவில்:

விரைவில்:

அல்காடெல் நிறுவனம் விரைவில் நவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படத்த திட்டமிட்டுள்ளது, மேலும் ஏற்கனவே வெளிவந்த அல்காடெல் 5, அல்காடெல் 3வி, அல்காடெல்1எக்ஸ் போனற் சாதனங்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Alcatel A3 tablet with 10-inch HD display and 4G LTE launched for Rs 9,999; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X