Home
Tablets

ஸ்மார்ட்போன் விலையில் ஏ3 10 டேப்ளெட் : நம்பி வாங்கலாமா.? என்னென்ன அம்சங்கள்.?

இந்த சாதனம் 720 X1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.00 அங்குல தொடுதிரை கொண்டிருந்தது. அது மட்டுமே இந்த சாதனத்தின் சிறப்பம்சம் என்றவொரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

By Muthuraj

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2017 நிகழ்வில் அல்காடெல் நிறுவனம் அதன் ஏ3 10-அங்குல டேப்ளெட்தனை அறிமுகம் செய்த பின்னர் டிசிஎல் அல்காடெல் இறுதியாக இந்தியாவில் அல்காடெல் ஏ3 10 டேப்ளெட்தனை தொடங்கவுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு அல்காடெல் ஏ3 10 டேப்ளெட் அறிமுகமாகிறது.

ஸ்மார்ட்போன் விலையில் ஏ3 10 டேப்ளெட் : நம்பி வாங்கலாமா.?

அல்காடெல் ஏ3 10 டேப்ளெட்டின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், எம்டபுள்யூசி 2017 நிகழ்வின் போது அந்த நிறுவனத்தின் அறிமுகத்தில் இந்த சாதனம் 720 X1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.00 அங்குல தொடுதிரை கொண்டிருந்தது. அது மட்டுமே இந்த சாதனத்தின் சிறப்பம்சம் என்றவொரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

1 ஜிபி ரேம்

1 ஜிபி ரேம்

அல்காடெல் ஏ3 10 டேப்ளெட் ஆனது க்வாட் கோர் மீடியாடெக் செயலி மூலம் இயக்கப்படும் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்டிருக்கும். மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக விரிவாக்கப்படக்கூடிய 16 ஜிபி உள்ளடக்கக சேமிப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

கேமராவை பொறுத்தவரையில், அல்காடெல் ஏ3 10 டேப்ளெட் ஆனது 5 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும். மற்றும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் இது 4600எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், யூ.எஸ்.பி ஓ.டி.ஜி, எஃப்.எம். உள்ளிட்ட அனைத்து இணைப்பு விருப்பங்களும் கொண்ட இந்த டேப்ளெட்டில் அக்கசலரோமீட்டர், ஜியோர்ஸ்கோப், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார் ஆகிய ஆகியவை அம்சங்களும் அடங்கும்.

விலை

விலை

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் அல்காடெல் ஏ3 10-இன்ச் டேப் ஆனது ரூ.12,000/-க்கு கீழ் இருக்கும். சில தகவல்களின் கீழ் இந்த சாதனம் ரூ.9,999/-க்கு இந்தியாவில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகின்றன.

இ-காமர்ஸ்

இ-காமர்ஸ்

தற்போது வரை ப்ளிப்கார்ட் டில் இக்கருவி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வேறு எந்தெந்த இ-காமர்ஸ் தளத்தில் கிடைக்கும் என்ற தகவலை நிறுவனம் வழங்கவில்லை.

ஒன்டச் ஸ்மார்ட்போன்

ஒன்டச் ஸ்மார்ட்போன்

2004-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரான்சின் அல்காடெல்-லூசண்ட் மற்றும் சீனாவின் டிசிஎல் கம்யூனிகேஷன் ஆகியவற்றிற்கு இடையே ஒரு கூட்டு முயற்சியாக, டிசிஎல் அல்காடெல்-லூசண்ட் ஆனது ஒன் டச் மொபைல் மற்றும் டேப்ளெட் தொடர்களை தயாரிக்கின்றன. இந்த நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களின் ஒன்டச் ஸ்மார்ட்போன்களின் மூலம் அறியப்படுகிறது.

அல்காடெல் ஏ5 எல்இடி, அல்காடெல் ஏ3, அல்காடெல் யூ3

அல்காடெல் ஏ5 எல்இடி, அல்காடெல் ஏ3, அல்காடெல் யூ3

கடந்த எம்டபள்யூசி 2017 நிகழ்வின் போது, அல்காடெல் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் விண்டோஸ் 10 ஆற்றல்மிக்க 2 இன் 1 டேப்ளெட்தனை - அல்காடெல் ஏ5 எல்இடி, அல்காடெல் ஏ3, அல்காடெல் யூ3 மற்றும் அல்காடெல் ப்ளஸ் 12 என்ற 2 இன் 1 டேப்ளெட் ஆகிய சாதனங்களை - அறிமுகம் செய்தது என்ப என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Alcatel A3 10 tablet with Android Nougat launched in India for Rs 9,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X