இந்தியா: பட்ஜெட் விலையில் ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் அறிமுகம்.!
இந்த சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் ஆல்கடெல் நிறுவனம் தற்சமயம் புதிய ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த டேப்லெட் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனம் பளிப்கார்ட் வலைதளம் வழியே விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேப்லெட் மாடலின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் மாடல் பொதுவாக 8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 1280 x 800 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செயலி:
இக்கருவி மீடியாடெக் எம்டி8765ஏ 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமரா:
ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் குறைந்த வெளிசத்தில் அருமையாக புகைப்படம் எடுக்கும் ஆதரவுடன் வெளிவந்துள்ளது
இந்த டேப்லெட் மாடல்.

சேமிப்பு:
இந்த சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜி.பி.எஸ், எஃப்எம் இஹெட்செட் ஜேக். போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஆல்கடெல் 3டி 8 டேப்லெட்.

விலை:
ஆல்கடெல் 3டி 8 டேப்லெட் சாதனம் பொதுவாக 4080எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.9,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications