பட்ஜெட் விலையில் அல்காடெல் டேப்ளெட் 3டி அறிமுகம்: நம்பி வாங்கலாமா.?
அல்காடெல் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அல்காடெல் டேப்ளெட் 3டி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது பின்பு பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்காடெல் டேப்ளெட் 3டி பொதுவாக 10-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 1280 x 800பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த டேப்ளெட் சாதனத்தில் 1.28ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி8765எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அல்காடெல் டேப்ளெட் 3டி வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

அல்காடெல் டேப்ளெட் 3டி சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சாதனத்தின் பின்புறம் 2எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அல்காடெல் டேப்ளெட் 3டி சாதனத்தின் முன்பு டூயல் ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு DSP far-field voice அம்சம் என பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

அல்காடெல் டேப்ளெட் 3டி சாதனத்தின் 2000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.9,999-ஆக உள்ளது,எனவே இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications