ஆர்டர் அனல் பறக்குது.. ரூ.12,900 விலைக்கு 1 டிபி மெமரி.. 5100mAh பேட்டரி.. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
டேப்லெட் மார்கெட்டே அதிரும்படி ஏசர் நிறுவனத்தின் ஏசர் ஒன் 10 (Acer One 10) மற்றும் ஏசர் ஒன் 8 (Acer One 8) டேப்லெட்கள் மலிவான பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முழு அம்சங்கள், விலை, விற்பனை விவரங்கள் இதோ.
ஏசர் ஒன் 10 அம்சங்கள் (Acer One 10 Specifications): இந்த டேப்லெட் ஸ்லீக் மற்றும் லைட்வெயிட் டிசைனில் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. 10.1 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு (Incell Panel Technology) இன்செல் பேனல் டெக்னாலஜி கொண்ட டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 350 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி8768 (Octa-Core MediaTek MT8768) சிப்செட் கொண்டுள்ளது. இந்த ஏசர் டேப்லெட் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.
1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்பீக்கர் யூனிட் வருகிறது. இந்த ஸ்பீக்கர்களில் ஸ்டீரியோ அவுட்புட் (Stereo Output) சப்போர்ட் இருக்கிறது. இந்த டேப்லெட்டில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ் (Sony IMX) சென்சாருடன் கூடிய 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா வருகிறது.
5 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. நீண்ட பேக்கப்புக்காக 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4ஜி சிம் போர்ட், வை-பை 5 டூயல் பேண்ட், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. மொத்தமாக 449 கிராம் எடைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டுக்கு 1 வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது.
ஏசர் ஒன் 8 அம்சங்கள் (Acer One 8 Specifications): இந்த டேப்லெட்டும் லைட்வெயிட் மற்றும் ஸ்லீக் டிசைனில் 8.7 இன்ச் (1340 x 800 பிக்சல்கள்) ஐபிஎஸ் பேனல் (IPS Panel) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 350 பீக் பிரைட்னஸ் வருகிறது.
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் எம்டி8768 சிப்செட் கொண்டுள்ளது. இந்த டேப்லெட் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு 1 டிபி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. 2 எம்பி செல்பீ கேமரா மற்றும் 8 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 5100mAh பேட்டரி வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு பேக்கப் கொடுக்கும். இந்த ஏசர் ஒன் 8 டேப்லெட்டின் எடை 345 கிராம் இருக்கிறது. இதன் மற்ற அம்சங்கள் ஏசர் ஒன் 10 டேப்லெட்டில் வருவதை போலவே இருக்கின்றன.
இந்த டேப்லெட்டின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.12,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஏசர் ஒன் 10 டேப்லெட்டின் விலையை பொறுத்தவரையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை ரூ.17,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.19,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் கிரே (Gery) கலரில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. ஏசர் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள் மற்றும் இ-ஸ்டோர்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








