7400mAh பேட்டரி.. 16எம்பி கேமரா.. புதிய Acer டேப்லெட் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?
ஏசர் நிறுவனம் இந்தியாவில் ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 (Acer Iconia Tab iM11) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் குவாட் ஸ்பீக்கர்கள், கீபோர்டு, ஸ்டைலஸ் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 அம்சங்கள் (Acer Iconia Tab iM11 specifications): 11.45-இன்ச் 2.2கே ஐபிஎஸ் டிஸ்பிளே (2.2K IPS display) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 450 நிட் பிரைட்னஸ் மற்றும் இன்-செல் டச் டெக்னாலஜி( in-cell touch technology) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (MediaTek Helio G99 chipset) உடன் இந்த புதிய ஏசர் டேப்லெட் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேப்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அனைத்து ஆப்களையும் இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ஆட்டோஃபோகஸ் மற்றும் ஃபிளாஷ் கொண்ட 16எம்பி ரியர் கேமராவுடன் இந்த புதிய ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் இந்த ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடலில் உள்ளன. யுஎஸ்பி-சி போர்ட், 4ஜி எல்இடி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. மேலும் 7400mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஏசர் ஐகோனியா டேப் ஐஎம்11 மாடலின் விலை ரூ17,990-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,990-ஆக உள்ளது. நீல நிறத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும். அதுவும் ஜூலை 15-ம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








