Home
Tablets

7400mAh பேட்டரி.. 16MP கேமரா.. IPS டிஸ்பிளே.. ரூ.26000 பட்ஜெட்ல புது Acer டேப்லெட்.. எந்த மாடல்?

ஏசர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை டேப்லெட் மாடலாக ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி (Acer Iconia iM11 5G) வெளியாகி இருக்கிறது. வை-பை மாடல்கள் கிடைக்கும் விலைக்கு 5ஜி கனெக்டிவிட்டியுடன் கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 7400mAh பேட்டரி, 16 எம்பி கேமரா, ஐபிஎஸ் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.

இந்தியாவில் ஏசர் நிறுவனத்தின் லேப்டாப் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், மற்ற பிராண்ட்களைவிட கொஞ்சம் மலிவான விலைக்கு கிடைக்கும். அதே நேரத்தில் பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும்படி இருக்கும். இப்போது, டேப்லெட் மாடல்களும் அந்த கான்செப்ட்டில் கிடைக்க தொடங்கிவிட்டன. இதில் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மிரளவிடுகிறது.

7400mAh பேட்டரி.. 16MP கேமரா.. IPS டிஸ்பிளே.. ரூ.26000 பட்ஜெட்!

வை-பை மாடல்களே ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கின்றன. ஆனால், இதில் 5ஜி மற்றும் 4ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஹை-ஸ்பீடு இன்டர்நெட்டை நேரடியாக பயன்படுத்தி கொள்ள முடியும். டூயல் சிம் (Dual SIM) சப்போர்ட் கிடைப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டியையும் பயன்படுத்தி கொள்ள முடியும். கீபோர்ட் மற்றும் போகோ பின் சப்போர்ட் உள்ளது.

ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி அம்சங்கள் (Acer Iconia iM11 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி8791 (Octa Core MediaTek MT8791) சிப்செட்டை இந்த ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி டேப்லெட் கொடுத்துள்ளது. இது 5ஜி கனெக்டிவிட்டி கொடுக்கும். ஆனால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது. ஏஐ என்ஜின் (AI Engine) சப்போர்ட் உள்ளது.

1440 x 2200 பிக்சல்களுடன் 11.45 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியை இந்த ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி டேப்லெட் கொண்டுள்ளது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. டூயல் சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கும்.

16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி கொடுத்துள்ளது. பிரீமியம் மாடல்களில் கூட சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே வருகின்றன. இதில் டூயல் கேமரா கிடைப்பதால், கேமரா பிரியர்களுக்கும் ஏற்ற மாடலாக இருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo Speakers) மற்றும் மைக்ரோபோன் கொடுக்கப்பட்டு உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7400mAh பேட்டரி கிடைக்கிறது. பவர் பட்டனுடன் சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டிவ் ஸ்டைலஸ் ( Active stylus) கொடுக்கப்பட்டு உள்ளது. கீபோர்ட் கவர் மற்றும் போகோ பின் கிடைக்கிறது.

ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி விலை (Acer Iconia iM11 5G Price): ரூ.25,499 விலைக்கு இந்த ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஏசர் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்கிறது. சில்வர் (Silver) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்லிம் மெட்டல் பாடி (Slim Metal Body) உள்ளது.

Best Mobiles in India

English summary
Acer Iconia iM11 5G With 7400mAh Battery Launched in India Under Rs 26K Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X