ஆர்டர் போட்ருங்க.. 7400mAh பேட்டரி.. 16எம்பி கேமரா.. ஆஃபரில் Acer 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி (Acer Iconia iM11 5G) மாடல் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி அம்சங்கள் (Acer Iconia iM11 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி8791 (Octa Core MediaTek MT8791) சிப்செட் உடன் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த சாதனத்தில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த டேப்லெட் இயங்குகிறது. அதேபோல் ஏஐ என்ஜின் (AI Engine) சப்போர்ட் இந்த சாதனத்தில் உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.
11.45 இன்ச் ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே உடன் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1440 x 2200 பிக்சல்ஸ், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
16 எம்பி பிரைமரி கேமரா உடன் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில உள்ளன.
குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Quad Stereo Speakers) கொண்டுள்ளது ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடல். ஆகவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும். மைக்ரோபோன் ஆதரவு இதில் உள்ளது. சில்வர் (Silver) மற்றும் ப்ளூ (Blue) நிறங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும்.

7400mAh பேட்டரி உடன் ஏசர் ஐகானியா ஐஎம்11 5ஜி மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்லெட் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவு இந்த டேப்லெட் மாடலில் உள்ளது. அதேபோல் 5ஜி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications