Home
Tablets

இதுக்கு மேல கம்மி விலையில் யாராலயும் விற்க முடியாது.. 7700mAh பேட்டரி.. ஆஃபரில் Lenovo 5ஜி டேப்லெட்..

அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி (Lenovo Tab M10 5G) மாடல் தள்ளுபடி விலையில் வாங்கி கிடைக்கிறது. டால்பி அட்மாஸ், 7700எம்ஏஎச் பேட்டரி, 10.61-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லெனோவா டேப்லெட் வெளிவந்தது. இப்போது லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

இதுக்கு மேல கம்மி விலையில் யாராலயும் விக்க முடியாது..

லெனோவா டேப் எம்10 5ஜி அம்சங்கள் (Lenovo Tab M10 5G Specifications): 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள்1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speaker) உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம்.

13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி. இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. குறிப்பாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி டேப்லெட்.

7700mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா டேப் எம்11:

அதேபோல் அமேசான் தளத்தில் லெனோவா டேப் எம்11 மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 8ஜிபி ரேம் மறறும் 128ஜிபி மெமரி கொண்ட லெனோவா டேப் எம்11 மாடலுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

லெனோவா டேப் எம்11 அம்சங்கள் (Lenovo Tab M11 specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MediaTek Helio G88 SoC)உடன் வெளிவந்துள்ளது லெனோவா டேப் எம்11 மாடல். அதேபோல் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். இதுதவிர மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.

11-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், Netflix HD சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டேப்லெட் மாடலின் சிறந்த திரை அனுபவம் வழங்கும்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி லெனோவா டேப் எம்11 மாடலில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லெனோவா டேப் எம்11 மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா டேப் எம்11 மாடல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 15 (Android 15) வரை தடையில்லாத அப்டேட்டை பெரும் என்றும், அதேபோல், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேடுகளை பெரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல் 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா உடன் லெனோவா டேப் எம்11 மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இதன் ரியர் கேமரா ஆட்டோபோகஸ், 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு ஆதரவு கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டு இந்த லெனோவா டேப்லெட் வெளிவந்துள்ளது. இதன் செல்பி கேமராவும் 1080 பிக்சல்ஸ் வீடியோ பதிவு செய்யும்.

இதுக்கு மேல கம்மி விலையில் யாராலயும் விக்க முடியாது..

குறிப்பாக லெனோவா டேப் எம்11 மாடல் ஆனது 7040எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடல நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த டேப்லெட் மாடலின பேட்டரியை சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங வசதியும் உள்ளது. IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & splash Resistant) கொண்டிருக்கிறது இந்த டேப்லெட்.

மேலும் டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவுடன் கூடிய குவாட்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த டேப்லெட் மாடலில் உள்ளன. பின்பு ஃபேஸ் அன்லாக் ஆதரவு இதில் உள்ளது. அதேபோல் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
62 Percent Discount on Lenovo Tab M10 5G in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X