பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.12,149 போதும்.. QUAD ஸ்பீக்கர்கள்.. 7100mAh பேட்டரி.. எந்த டேப்லெட்?
ஒட்டுமொத்த டேப்லெட் பிரியர்களும் பிளிப்கார்ட்டில் குவியும்படியான டிஸ்கவுண்ட் ஓப்போ பேட் ஏர் (OPPO Pad Air) டேப்லெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 10.36 இன்ச் டிஸ்பிளே, குவாட் ஸ்பீக்கர்கள், 7100mAh பேட்டரி போன்ற அம்சங்களில் இந்த டேப்லெட் அசத்துகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
ஓப்போ பேட் ஏர் அம்சங்கள் (OPPO Pad Air Specifications): இந்த ஓப்போ டேப்லெட்டில் 10.36 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 225 பிபிஐ (PPI) மற்றும் 360 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 120Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் உள்ளது.

இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த ஓப்போ டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 680 6nm Mobile) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஓஎஸ் 12 (ColorOS 12) மற்றும் அட்ரினோ 610 ஜிபுயு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த டேப்லெட்டில் 8 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் போர்ட்ராய்டு (Portrait), பனோரமா (Panorama), டைம் லேப்ஸ் (Time Lapse), டெக்ஸ் ஸ்கேனர் (Text Scanner) போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இதிலும் ரியர் கேமராவில் வரும் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் 1080p தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ளலாம்.
இந்த ஓப்போ பேட் ஏர் டேப்லெட்டின் ஆடியோவும் பக்காவாக இருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஆடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7100mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 440 கிராம் எடைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து 15 மணி நேரங்களுக்கு வீடியோ பிளே பேக் கிடைக்கும்.
இந்த ஓப்போ பேட் ஏர் டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. அதோடு 4 ஜிபி ரேம் + 64 மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் பர்பிள் (Purple) மற்றும் கிரே (Grey) கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்பின் விலை குறைப்பின் காரணமாக பிளிப்கார்ட் தளத்தில் 128 ஜிபி மாடலின் விலை ரூ.13,499ஆக இருந்தது. இப்போது, இந்த விலையிலும் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,350 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல ரூ.9,200 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த மாடலை வெறும் ரூ.12,149க்கு வாங்கிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








