Home
Tablets

அதிரி புதிரி ஆர்டர்.. ஸ்னாப்டிராகன் சிப்செட், 7700mAh பேட்டரி.. ஆஃபரில் Lenovo 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி (Lenovo Tab M10 5G) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது 7700 எம்எஏச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 13எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் Lenovo 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா டேப் எம்10 5ஜி அம்சங்கள் (Lenovo Tab M10 5G Specifications): 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இது வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 (Qualcomm Snapdragon 695) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள்1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரு வைஃபை + 5ஜி மாடல் ஆகும்.

அதேபோல ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speaker) உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல் 13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது . எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் Lenovo 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

குறிப்பாக லெனோவா டேப் எம்10 5ஜி ஆனது டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது. இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது. குறிப்பாக 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட்.

7700mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். எனவே இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
60 Percent Discount on Lenovo M10 5G With 13MP camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X