Home
Tablets

ஆஃபர் விலை அறிவிப்பு.. செம்ம டிமாண்ட் ஆகப்போகும் OnePlus Pad.. நம்பி வாங்க 1 இல்ல.. 6 காரணங்கள் இருக்கு!

ஒன்பிளஸின் முதல் டேப்லெட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) அதன் இந்திய விற்பனைக்கு தயார் ஆகிவிட்டது. இந்த டேப்லெட்டின் ப்ரீ-ஆர்டர் ஏப்ரல் 28 முதல் தொடங்குகிறது; அதனை தொடர்ந்து இதன் திறந்த விற்பனை மே 2 முதல் தொடங்குகிறது!

ஒன்பிளஸ் போன்களை போலவே இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டையும் நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் அல்லது சந்தேகம் உங்களிடம் இருந்தால், அதை முடிந்த வேகத்தில் தீர்த்துக்கொள்ளவும். ஏனென்றால் இந்திய விற்பனை தொடங்கியதும், ஒன்பிளஸ் பேட் ஆனது பயங்கரமாக 'டிமாண்ட்' ஆகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Pad.. நம்பி வாங்க 1 இல்ல.. 6 காரணங்கள் இருக்கு!

ஒன்பிளஸ் பேட் டேப்லெட்டை நம்பி வாங்க ஒன்றல்ல, மொத்தம் 6 காரணங்களை முன்வைக்க முடியும். அதென்ன காரணங்கள் என்பதை பார்க்கும் முன், ஒன்பிளஸ் பேட்டின் விலை நிர்ணயம், கலர் ஆப்ஷன், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் அறிமுக சலுகைகள் போன்ற விவரங்களை பார்த்துவிடலாம்!

ஒன்பிளஸ் பேட் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ. 37,999 என்றும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜின் விலை ரூ.39,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது ஹாலோ கிரீன் (Halo Green) என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது ஏப்ரல் 28 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ப்ரீ-ஆர்டர் (Pre-order) செய்யக்கிடைக்கும்.

முன்பதிவுகளை தொடர்ந்து, இந்த டேப்லெட் மே 2 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ்.இன் (OnePlus.in_ வழியாக ஓப்பன் சேலுக்கு (Open Sale) வரும். இதனுடன் ஒன்பிளஸ் மேக்னட் கீபோர்ட் (ரூ.7,999) ஒயிட் ஸ்டைலஸ் (ரூ.4,999) மற்றும் ஃபோலியோ கேஸ் (ரூ.1,499) போன்ற ஆக்சஸெரீஸ்களும் வாங்க கிடைக்கும்.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்ட்னர் ஸ்டோர்களில் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வழியாக ஒன்பிளஸ் பேட்-ஐ வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் ஒன்பிளஸ்.இன், அமேசான், பிளிப்கார்ட், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ, தேர்ந்தெடுக்கப்பட்ட ரிலையன்ஸ் மற்றும் க்ரோமா ஸ்டோர்களில் ப்ரீ-ஆர்டர் செய்தால் ரூ.1,499 மதிப்புள்ள ஃபோலியோ கேஸ் இலவசமாக கிடைக்கும். இதுதவிர ஒன்பிளஸ் எக்ஸ்சேன்ஜ் (OnePlus Xchange) திட்டத்தின் கீழ், ஒன்பிளஸ் போன்களுக்கு ஈடாக ரூ.5,000 ஆஃபர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஈடாக ரூ.3,000 ஆஃபரும் கிடைக்கும்.

இந்த டேப்லெட்டை நம்பி வாங்க 6 முக்கியமான காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று - இது டால்பி அட்மோஸுடன் (Dolby Atmos) நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட ஆடியோ குவாலிட்டியை உறுதிசெய்யும் ஓம்னிபேரிங் சவுண்ட் ஃபீல்ட் ( Omnibearing Sound Field) தொழில்நுட்பத்தையும் பேக் செய்கிறது.

இரண்டு - இது 144ஹெர்ட்ஸ் ஹை ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 11.61-இன்ச் (2000 x 2800 பிக்சல்கள்) 10-பிட் ட்ரூ கலர் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மூன்று - இதன் ரியர் கேமரா 4கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. சுவாரசியமாக ஒன்பிளஸ் பேட்டில் எல்இடி ஃபிளாஷ் உடனான 13எம்பி சிங்கிள் ரியர் கேமரா மட்டுமே உள்ளது

நான்கு - இது சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் (MediaTek Dimensity 9000 SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஐந்து - இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9,510mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆறு - இந்த டேப்லெட்டில் வைஃபை 6, ப்ளூடூத் 5.3, டைப்-சி போர்ட் உட்பட பல வகையான கனெக்டிவிட்டி விருப்பங்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
6 Reasons to buy Oneplus Pad in India Pre Order Starts from April 28 and Open Sale From May 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X