Home
Tablets

ஆர்டர் அனல் பறக்குது.. வெறும் ரூ.8,999 விலைக்கு 7250mAh பேட்டரி.. 2K ரெசொலூஷன்.. 7GB ரேம்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் வெறும் ரூ.8,999 பட்ஜெட்டில் மெட்டல் பாடி, 2K ரெசொலூஷன் டிஸ்பிளே, 7ஜிபி ரேம், ஆட்டோ-போகஸ் கேமரா, 22W சார்ஜிங், 7250mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் ஹானர் பேட் எக்ஸ்9 (Honor Pad X9) டேப்லெட் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஹானர் பேட் எக்ஸ் 9 டேப்லெட் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கிறது. அதோடு 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 203 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் அனல் பறக்குது.. ரூ.8,999 விலைக்கு 7250mAh பேட்டரி டேப்லெட்!

இந்த டிஸ்பிளே ஃபிளிக்கப்-ப்ரீ சர்டிஃபிகேஷன் (Flicker-free Certification) மற்றும் லெவல் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (Level Low Blue Light Certification) பெற்றுள்ளது. இந்த ஹானர் டேப்லெட் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

அதோடு மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஹானர் டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த ஹானர் டேப்லெட்டில் 5 எம்பி ஆட்டோ போகஸ் (Auto Focus) மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 5 எம்பி பிக்சடு போகஸ் (Fixed Focus) செல்பீ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமரா ஃபுல்எச்டி (FHD) மற்றும் எச்டிஆர் (HDR) ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டது. அதோடு டைம் லேப்ஸ் (Time-Lapse), செல்பீ மிரரிங் (Selfie Mirroring) உள்ளிட்ட பீச்சர்கள் கொண்டிருக்கிறது.

ஆர்டர் அனல் பறக்குது.. ரூ.8,999 விலைக்கு 7250mAh பேட்டரி டேப்லெட்!

இந்த டேப்லெட்டில் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 6 ஸ்பீக்கர்கள் மற்றும் 1 மைக் வருகிறது. மேலும், ஹானர் ஹிஸ்டென் (HONOR Histen) என்னும் கிரிஸ்டல் கிளியர் சவுண்டிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7,250mAh பேட்டரி கொண்டுள்ளது.

இந்த பேட்டரியை தொடர்ந்து 13 மணி நேரத்துக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இதற்கு டைப் - சி (Type-C) சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹானர் பேட் எக்ஸ் 9 டேப்லெட்டின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), டூயல் பேண்ட் வை-பை 5 (Dual Band Wi-Fi 5) ஆகியவை வருகின்றன.

இந்த டேப்லெட் ஆக்சிலரேட் சென்சார் (Accelerate Sensor) மற்றும் கிரேவிட்டி சென்சார் (Gravity Sensor) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மொத்தமாக 499 கிராம் எடைக் கொண்டுள்ளது. அதேபோல 267.3 மிமீ நீளம், 167.4 மிமீ உயரம் மற்றும் 6.9 அகலம் கொண்டுள்ளது. இந்த ஹானர் டேப்லெட் கிரே (Grey) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில், இப்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்டர் அனல் பறக்குது.. ரூ.8,999 விலைக்கு 7250mAh பேட்டரி டேப்லெட்!

இதன் 64 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.999 தள்ளுபடியும், 128 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆகவே, 64 ஜிபி மாடலை ரூ.8,999க்கும், 128 ஜிபி மாடலை ரூ.14,749க்கும் வாங்கிக் கொள்ள முடியும். மிகவும் மலிவான விலையில் தரமான டேப்லெட் வேண்டும் என்றால், இந்த ஹானர் பேட் எக்ஸ்9 மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 Precent Discount on Honor Pad X9 in Amazon Great Indian Festival Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X