Home
Tablets

மொரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.12,999 போதும்.. 10.61 இன்ச் டிஸ்பிளே.. 7700mAh பேட்டரி.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

அமேசான் மெகா டேப்லெட் டேஸ் விற்பனையில் (Amazon Mega Tablet Days Sale) 50 சதவீதத்துக்கும் அதிகமான டிஸ்கவுண்ட் விலையில் பக்கா குவாலிட்டி மற்றும் பீச்சர்களுடன் பிராண்ட் டேப்லெட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ரூ.15,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு இந்த டேப்லெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் டாப் 3 மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் சாம்சங், லெனோவா மற்றும் ரெட்மி நிறுவனங்களின் டேப்லெட்கள் இடம்ப பெற்றுள்ளன.

லெனோவா டேப் 10 பிளஸ் அம்சங்கள் (Lenovo Tab M10 Plus Specifications): இதுவொரு 3ஆவது ஜெனரேஷன் மாடலாகும். இந்த டேப்லெட்டில் 10.61 இன்ச் (2000 x 1200 பிக்சல்) புல்எச்டி (FHD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 400 பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் டிஸ்பிளே (IPS Display) மாடலாகும்.

மொரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.12,999 போதும்.. 10.61 இன்ச் டிஸ்பிளே மாடல்!

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் வருகின்றன. ஸ்னாப்டிராகன் எஸ்டிஎம் 680 (Snapdragon SDM 680) சிப்செட் வருகிறது. இந்த லெனோவா மாடலில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. மேலும், இந்த டேப்லெட்டில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். 7700 பேட்டரி வருகிறது.

இந்த டேப்லெட்டின் கேமராவை பார்க்கையில், 8 எம்பி ஆட்டோபோகஸ் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. அதேபோல பிக்சட் போகஸ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த லெனோவா டேப்லெட்டானது, 54 சதவீத டிஸ்கவுண்ட் உடன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Specifications): இந்த டேப்லெட்டில் 8.7 இன்ச் (800 x 1340 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே (LCD Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (Octa Core MediaTek Helio G99) சிப்செட் வருகிறது.

மொரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.12,999 போதும்.. 10.61 இன்ச் டிஸ்பிளே மாடல்!

இந்த சாம்சங் மாடலில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. முந்தைய மாடலை போலவே , 8 எம்பி ஆட்டோபோகஸ் ரியர் கேமரா மற்றும் பிக்சட் போகஸ் சப்போர்ட் கொண்ட 2 எம்பி செல்பீ கேமரா வருகிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆனால், குவாட் ஸ்பீக்கர்கள் வரவில்லை. டூயல் ஸ்பீக்கர்கள் மட்டுமே வருகிறது. இந்த சாம்சங் மாடலில் 5100mAh பேட்டரி வருகிறது. இந்த பீச்சர்களுடன் 20 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.11,999 பட்ஜட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ரெட்மி பேட் எஸ்இ அம்சங்கள் (Redmi Pad SE Specifications): முந்தைய டேப்லெட்களைவிட சற்று கூடுதல் விலைக்கு கிடைப்பதால், அதற்கேற்ப பீச்சர்கள் வருகின்றன. இந்த டேப்லெட்டில் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் (Octa-Core Snapdragon 680) வருகிறது. இந்த டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் வருகிறது. 8000mAh பேட்டரி உள்ளது.

மொரட்டு டிஸ்கவுண்ட்.. ரூ.12,999 போதும்.. 10.61 இன்ச் டிஸ்பிளே மாடல்!

5 எம்பி செல்பீ கேமரா மற்றும் 8 எம்பி ரியர் கேமரா வருகிறது, மெட்டல் பாடி டிசைன் கொண்டிருக்கிறது. 25 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.14,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று மாடல்கலிலும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி மட்டுமே வருகிறது. பட்ஜெட்டில் நல்ல டேப்லெட் வேண்டுமானால், இவற்றை ஆப்ஷனில் வைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
54 Percent Discount on Lenovo Tab M10 Plus in Amazon Mega Tablet Days Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X