Home
Tablets

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. 7700mAh பேட்டரி.. 13MP கேமரா.. ஆஃபரில் லெனோவா 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Big saving days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லெனோவா டேப் எம்10 5ஜி (Lenovo Tab M10 5G)மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் லெனோவா டேப் எம்10 5ஜி மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.17749 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ஆஃபரில் லெனோவா 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

லெனோவா டேப் எம்10 5ஜி அம்சங்கள் (Lenovo Tab M10 5G Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 695(Qualcomm Snapdragon 695)சிப்செட் உடன் லெனோவா டேப் எம்10 5ஜி மாடல் வெளிவந்தது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்குகிறது. அதேபோல் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் 10.61-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate), 1200x2000 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது லெனோவா டேப் எம்10 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். அதாவது நீங்கள்1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா டேப் எம்10 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இதில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speaker) உள்ளன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த டேப்லெட் மாடலின் எடை 490 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடலில் 13எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக இந்த லெனோவா டேப் எம்10 5ஜி மாடல் ஆனது 7700 எம்எஏச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த சாதனம் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

மேலும் லெனோவா டேப் எம்10 5ஜி ஆனது டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது. இது கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்டெல்.

Best Mobiles in India

English summary
52 Percent Discount on Lenovo M10 5G With 6GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X