கனவுல கிடைக்காத ஆஃபர்.. ரூ.20,999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 11.61 இன்ச் டிஸ்பிளே.. 9510mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கனவுல நினைக்காத ஆஃபர் விலையில் 12 ஜிபி ரேம், 11.61 இன்ச் டிஸ்பிளே, 9510mAh பேட்டரி, 67W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) கிடைக்கிறது. இது மிகவும் அடிமட்ட விலையாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் விலை மாறலாம். ஆகவே, உடனடியாக இந்த டிஸ்கவுண்ட் விலையை பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த டேப்லெட் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஒன்பிளஸ் பேட் மாடலானது, இந்திய மார்கெட்டில் வெளியான போது, அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 39,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் இப்போது, வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.605 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.8,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது.

ஒன்பிளஸ் பேட் அம்சங்கள் (OnePlus Pad Specifications): இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் 11.61 இன்ச் (2800 x 2000 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. ஆகவே, கேமிங் பியர்களுக்கு பக்கா ஆப்ஷாக இருக்கிறது. மேலும், 296 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த டேப்லெட்டில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 (OxygenOS 13.1) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9000 (MediaTek Dimensity 9000) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, 5ஜி டேட்டா வேகத்தில் வை-பை கனெக்டிவிட்டி எதிர்பார்க்கலாம்.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆர்ம் ஜி710 எம்சி10 ஜிபியு (ARM G710 MC10 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கப் பற்றிய கவலை இந்த ஒன்பிளஸ் பேட் மாடலில் இருக்காது. ஏனென்றால், 9510mAh பேட்டரி மட்டுமல்லாமல், 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த பேட்டரி மூலம் 14.5 மணி நேரங்களுக்கு வீடியோ பேக்கப் பெற்று கொள்ளலாம். ஸ்டாண்ட்பை மோடில் 1 மாதத்துக்கு பேக்கப் கொடுக்கும். 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. செல்பீ கேமராவில் வீடியோ ஜூமிங் உள்ளது.
அதேபோல எல்க்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆடியோவில் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. இந்த டேப்லெட்டுக்கு டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், பேஸ் அன்லாக், லைட் சென்சார், கிராவிட்டி சென்சார், ஹால் சென்சார் மற்றும் கலர் டெப்ம்ரேச்சர் சென்சார்கள் கிடைக்கின்றன. மீண்டும் விலை ஏறுவதற்குள் வாங்கி கொள்ளலாம். பட்ஜெட்டைவிட பிரீமியமாக மாடலாகும்.


Click it and Unblock the Notifications








