அசரவைக்கும் அமேசான்.. ரூ.9999 பட்ஜெட்ல 8300mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. ஆஃபரில் HONOR டேப்லெட்..
அமேசான் தளத்தில் ஹானர் பேட் எக்ஸ்8ஏ (Honor Pad X8a) மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், குவாட் ஸ்பீக்கர்கள், பெரிய பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. இப்போது ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.9999 விலையில் இந்த டேப்லெட் மாடலை வாங்கிவிட முடியும்.

ஹானர் பேட் எக்ஸ்8ஏ அம்சங்கள் (Honor Pad X8a Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 680 (Qualcomm Snapdragon 680) சிப்செட் வசதி இந்த டேப்லெட் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த டேப்லெட் மாடலுக்கு கிடைக்கும்.
11-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் பேட் எக்ஸ்8ஏ. பின்பு 1200 x 1920 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எகஸ்8 ப்ரோ மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
5எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். ஆனால் 13எம்பி ரியர் கேமராவுடன் இந்த டேப்லெட் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல்.
குறிப்பாக ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடலில் 8300mAh பேட்டரி வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு சிறந்த ஆடியோ அனுபவத்திற்காக குவாட் ஸ்பீக்கர்களுடன் (quad speakers) வருகிறது இந்த புதிய டேப்லெட். மேலும் ஒரு மைக்ரோபோன் ஆதரவும் இதில் உள்ளது. அதேபோல் 495 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல்.
வைஃபை 802.11, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹானர் பேட் எக்ஸ்8ஏ மாடல். பின்பு இந்த சாதனத்தில் எடை 459 கிராம் ஆகும். தற்போது ஸ்பேஸ் கிரே (Space Gray) நிறத்தில் இந்த ஹானர் டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் ஹானர் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








