Samsung ஒரே போடு.. ரூ.4,500 விலை குறைப்பு.. ரூ.14,999-க்கு வந்த 5G டேப்லெட்.. 7040mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் (Samsung Galaxy Tab A9+) டேப்லெட் மாடலுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால் ரூ.4,500 விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். வை-பை மட்டுமல்லாமல் 5ஜி கனெக்டிவிட்டி, 7040mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், எல்சிடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் மாடலின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

அதேபோல ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும் ரூ.4,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.18,720 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆகவே, சிம் சிலாட் கொடுக்கப்படுகிறது. இதுபோக ஈசிம் சப்போர்ட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A9 Plus Specifications): இந்த டேப்லெட் காம்பாக்ட் மாடலாகவும் அதே நேரத்தில் கொஞ்சம் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இருக்கிறது. இதில் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் WQXGA ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
5ஜி கனெக்டிவிட்டிக்கு ஏற்ப ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) மொபைல் சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து இருக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே ஆரம்பத்தில் கிடைக்கும். ஒன்யுஐ 5.1.1 (OneUI 5.1.1) கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைக்கிறது. இதில் வை-பை அல்லது 5ஜி வேரியண்ட்களும் இருக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் மாடலில் 15W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7,040mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது.
கிட்டத்தட்ட பிரீமியம் டேப்லெட்களுக்கு நிகரான ஆடியோ சிஸ்டம் கிடைக்கிறது. ஏனென்றால், இதில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவுக்கு நிகராக ஆடியோவிலும் பிரீமியம் அனுபவம் எதிர்பார்க்கலாம். 8 எம்பி ரியர் கேமராவை கிடைக்கிறது.
அதேபோல சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் டேப்லெட்டில் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. நானோ சிம் சிலாட் (Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், கூடுதல் ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். இந்த மாடலில் 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
டார்க் ப்ளூ (Dark Blue), கிரே (Grey) அல்லது சில்வர் (Silver) கலர் ஆப்ஷன்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகி இப்போது ரூ.15,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதுவும் சாம்சங் என்னும் பிராண்ட் டேப்லெட்டாக இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications