Home
Tablets

ஆர்டர் அள்ள போகுது.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 10000mAh பேட்டரி.. ஆஃபரில் போக்கோ 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனத்தின் போக்கோ பேட் 5ஜி (POCO Pad 5G) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த டேப்லெட் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ பேட் 5ஜி மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ பேட் 5ஜி மாடலுக்கு 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டேப்லெட் மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் போக்கோ 5ஜி டேப்லெட்.. எந்த மாடல்?

போக்கோ பேட் 5ஜி அம்சங்கள் (POCO Pad 5G Specifications): 12.1 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த அட்டகாசமான டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 2560 × 1600 பிக்சல்கள், 2.5K ரெசல்யூஷன் , 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த டேப்லெட் வெளிவந்தது. எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட இந்த டேப்லெட் மாடலுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

இந்த போக்கோ 5ஜி டேப்லெட் ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) மூலம் இயங்குகிறது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களை இந்த டேப்லெட் மாடலில் பயன்படுத்த முடியும். பின்பு அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இதில் உள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Dolby Vision Corning Gorilla Glass 3) பாதுகாப்பு உடன் இந்த டேப்லெட் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ பேட் 5ஜி மாடல். 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா இந்த டேப்லெட் மாடலில் உள்ளன.

அதேபோல் 5ஜி சிம் கார்டு சப்போர்ட் உள்ளதால், ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் கிடைக்கிறது. இந்த போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இருக்கின்றன. எனவே இந்த டேப்லெட் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

10000mAh பேட்டரி உடன் போக்கோ பேட் 5ஜி வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் 16 மணி நேரம் வீடியோ பிளேபேக் கொடுக்கும். இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charing) சப்போர்ட் கிடைக்கிறது. எனவே இந்த டேப்லெட் மாடலை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

கோபால்டு ப்ளூ (Cobalt Blue), பிஸ்தாசியோ கிரீன் (Pistachio Green) கலர்களில் கிடைக்கிறது. 5ஜி (5G) கனெக்டிவிட்டியுடன் வை-பை (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) சப்போர்ட் கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
39 Percent Discount on POCO Pad 5G in Flipkart Sale: check specifications price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X