அதகள டிஸ்கவுண்ட்.. ரூ.16,889 பட்ஜெட்ல 8360mAh பேட்டரி.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
11.5 இன்ச் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 8360mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி பேட் 2 (realme Pad 2) மாடலானது நம்ப முடியாத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.
7.2 மிமீ அல்ட்ரா ஸ்லிம் டிசைன் கொண்ட மெட்டல் பாடி, பிரீமியம் குளோவிங் கலர் வேரியண்ட்கள், சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், டைனாமிக் ரேம் போன்ற மிட்-ரேஞ்ச் டேப்லெட்களில் வரும் பீச்சர்கள் இந்த பட்ஜெட் மாடலிலேயே வருகின்றன. இந்த மாடலின் விலை, விற்பனை விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த டேப்லெட்டில் 11.5 இன்ச் (2000x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் வருகிறது.
2K ரெசொலூஷன், ப்ளூ லைட் புரொடெக்சன் (Blue Light Protection) மற்றும் பிரீமியம் குவாலிட்டி இமேஜிங் சப்போர்ட் கொண்ட அல்ட்ரா விஷன் என்ஜின் (Ultra Vision Engine) வருகிறது. ஆகவே, பெரிய டிஸ்பிளேவுக்கு ஏற்ப குவாலிட்டியான பீச்சர்கள் வருவதால், வீடியோ அனுபவம் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.
இந்த ரியல்மி பேட் 2 மாடலில் 33W சூப்பர்வூக் சார்ஜிங் (SuperVOOC Charging) சப்போர்ட் கொண்ட 8,360mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 17 மணி நேரத்துக்கு வீடியோ பிளேபேக் பெறலாம். அதேபோல 190 மணி நேரம் மியூசிப் பிளேபேக் கொடுக்கும். ஆகவே, நாள் முழுவதும் பேக்கப் எதிர்பார்க்கலாம்.
இந்த டேப்லெட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. மீடியம் கேமிங் அவுட்புட் கொண்ட ஆர்ம் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 4.0 வருகிறது.
இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டில் 6 ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ கொண்டுள்ளது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகின்றன. ஆகவே, ஸ்டீரியோ ஆடியோ அனுபவம் எதிர்பார்க்கலாம். 8 எம்பி ரியர் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியர் கேமராவில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் (Full HD Video Recording) சப்போர்ட் வருகிறது.
இந்த ரியல்மி பேட் 2 மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) போன்ற கனெக்விட்டி பீச்சர்கள் வருகின்றன. இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரேஷன் கிரீன் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1110 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த 11.5 இன்ச் டிஸ்பிளே டேப்லெட்டை வெறும் ரூ.16,889 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








