லட்டு மாதிரி ஆஃபர்.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. QUAD ஸ்பீக்கர்கள்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ பேட் 60 ப்ரோ (Moto Pad 60 Pro) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 10200mAh பேட்டரி, 45W சார்ஜிங், குவாட் ஸ்பீக்கர்கள், 144Hz டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆட்டோ போகஸ் கேமரா, ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ மாடலின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 36 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.27,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.26,249 விலைக்கு இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ மாடலை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ பேட் 60 ப்ரோ அம்சங்கள் (Moto Pad 60 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 4nm) சிப்செட்டை இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ மாடல் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) வரையில் அப்டேட்டை கொண்டுள்ளது. 12.7 இன்ச் (2944 x1840 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளேவுக்கு 144 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 273 பிபிஐ பிக்சல் டென்சிட்டி (PPI Pixel Density) மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களை கொண்டுள்ளது. 4 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் (JBL Speakers) கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களுக்கு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டூயல் மைக்ரோபோன்களை (Dual Microphone) இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ மாடல் கொடுத்து இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி போக மற்றொரு வேரியண்ட் உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ மாடல் கொண்டுள்ளது. இதில் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
இதில் பிக்சடு போகஸ் மட்டுமே கிடைக்கிறது. பவர் கீ (Power Key) ஆனது ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 10200mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type - C Charging Port) கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது.
வை-பை 6இ 801.11 ஏஎக்ஸ் (Wi-Fi 6E 802.11 ax) கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3), ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது. மோட்டோ பென் ப்ரோ (Moto Pen Pro) கிடைத்துள்ளது. ஹால் சென்சார், ஆர்ஜிபி சென்சார், கைரோஸ்கோப் சென்சார்கள் வருகின்றன. பான்டோன் ப்ரோன்ஸ் கிரீன் கலரில் இந்த மோட்டோ பேட் 60 ப்ரோ ஆர்டர் செய்ய கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








