Home
Tablets

டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த டேப்லெட் பிரியர்களும் விரும்பும்படியான பட்ஜெட்டில் 12.1 இன்ச் டிஸ்பிளே, 8 ஸ்பீக்கர்கள், 35W ஃபாஸ்ட் சார்ஜிங், 8300mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ஹானர் பேட் 9 (HONOR Pad 9) மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்கள், லேப்டாப் போன்ற ஆடியோ, வீடியோ அவுட்புட் ஆகியவற்றுக்காகவே பிரத்யேகமாக தயாரித்தது போல ஹானர் பேட் 9 டேப்லெட் களமிறங்கி இருக்கிறது. பெரிய டிஸ்பிளே, பெரிய பேட்டரி என்று லேப்டாப்புக்கு நிகராக பீச்சர்களும், 4K ரெக்கார்டிங் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் போன்ற மொபைல் பீச்சர்களும் கொண்டிருக்கிறது.

டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே டேப்லெட்!

இதனால், ஹானர் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டேப்லெட் பிரியர்களும் இந்த மாடலின் விற்பனைக்காக காத்திருந்தனர். இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.2000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துவிட்டது. முதலில் இந்த ஹானர் பேட் 9 டேப்லெட்டின் அம்சங்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை காண்போம்.

ஹானர் பேட் 9 அம்சங்கள் (HONOR Pad 9 Specifications): இந்த மாடலில் 12.1 இன்ச் (2560 x 1600 பிக்சல்கள்) டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட WQXGA டிஸ்பிளே மாடலாகும். அதோடு 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, ஸ்கிரீன் அவுட்புட் லேப்டாப்புக்கு நிகராக மிரளவிடும்படி இருக்கும். அதேநேரத்தில் ஹிஸ்டன் சவுண்ட் எஃபெக்ட்ஸ் (Histen sound effects) சப்போர்ட் கொண்ட 8 ஸ்பீக்கர்கள் வருவதால், ஆடியோ அனுபவம் அடுத்த லெவலில் எதிர்பாக்கலாம். அதுமட்டுமல்லாமல், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகிறது.

டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே டேப்லெட்!

இந்த ஹானர் லேப்லெட் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. ஆகவே, கேமிங் அனுபவம் மற்றும் மல்டி மீடியா ரென்டரிங் பக்கா ஸ்மூத்தாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்ட் மெஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் கேமராவை பார்க்கையில், 13 எம்பி ஆட்டோ போகஸ் ரியர் கேமரா வருகிறது. இந்த கேமராவில் 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) சப்போர்ட் வருகிறது.

அதேபோல 8 எம்பி பிக்ஸட் போகஸ் செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் (FHD Video Recording) சப்போர்ட் உள்ளது. ஆகவே, பட்ஜெட்டை விட கூடுதல் கேமரா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். மொபைல் போன்களை போலவே 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது.

அதன்படி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி சப்போர்ட் வருகிறது. அப்படியே பேட்டரி பீச்சர்களை பார்த்தால், 35W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8300mAh பேட்டரி வருகிறது. ஆகவே, ஹெவி யூசேஜ் செய்தாலும், 1 நாள் முழுக்க பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரியோடு 555 கிராம் எடை கொண்டுள்ளது.

அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 6.96 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) மற்றும் ஓடிஜி (OTG) கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இவ்வளவு அம்சங்களை கொண்டிருக்கும் இந்த டேப்லெட்டின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது.

இருப்பினும், ரூ.2000 டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. அதுவே அமேசான் தளத்தில் இந்த டேப்லெட்டை ஆர்டர் செய்தால், வெறும் ரூ.22,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே, பக்கா பர்ஃபாமென்ஸ் மற்றும் அதிக பேட்டரி பேக்கப் வேண்டுமானால், இந்த மாடல் சரியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percent Discount on HONOR Pad 9 With 8GB RAM, 8300mAh Battery in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X