ஆர்டர் பிச்சிக்குது.. ரூ.18999 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 10000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த டேப்லெட்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட்டில் 5ஜி டேப்லெட் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு 5ஜி மட்டுமல்லாமல், கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சனுடன் 12.1 இன்ச் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 10000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 உடன் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 எஸ்ஓசி போன்ற பீச்சர்களையும் கொடுக்கும் போக்கோ பேட் 5ஜி (POCO Pad 5G) டேப்லெட்டுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
போக்கோ பேட் 5ஜி அம்சங்கள் (POCO Pad 5G Specifications): இந்த போக்கோ 5ஜி டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கிடைக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் யுஐ அனுபவம் கிடைக்கும். 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 (4nm Octa Core Snapdragon 7s Gen 2) எஸ்ஓசி கிடைக்கிறது.

இதுபோக அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைப்பதால், லாக்-ப்ரீ அவுட்புட் பெற்று கொள்ளலாம். இந்த போக்கோ மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Dolby Vision Corning Gorilla Glass 3) பாதுகாப்பு கொண்ட 12.1 இன்ச் (2560 × 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அதேபோல டிசி டிம்மிங் (DC Dimming) வருகிறது. 2 வேரியண்ட்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. 1.5 டிபி மெமரி சப்போர்ட் உள்ளது.
ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளது. 5ஜி சிம் கார்டு சப்போர்ட் உள்ளதால், ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் கிடைக்கிறது. இந்த போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டில் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட்டுடன் வருகிறது. மேலும், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) இருக்கின்றன.
16 மணி நேரம் வீடியோ பிளேபேக் கொடுக்கும்படி 10000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charing) சப்போர்ட் கிடைக்கிறது. பெரிய பேட்டரி வந்திருந்தும், 7.52 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல பேட்டரியுடன் 568 கிராம் எடை வருகிறது.
கோபால்டு ப்ளூ (Cobalt Blue), பிஸ்தாசியோ கிரீன் (Pistachio Green) கலர்களில் கிடைக்கிறது. 5ஜி (5G) கனெக்டிவிட்டியுடன் வை-பை (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) சப்போர்ட் கிடைக்கிறது. சியோமி மற்றும் போக்கோ மொபைல்களுடன் இன்கனெக்டிவிட்டி சப்போர்ட் கொடுக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருந்தது.
பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஈஎமஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. போக்கோ கீபோர்ட் சப்போர்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








