Home
Tablets

அவ்ளோதானா.. ரூ.20999 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 1.5TB மெமரி.. 4 ஸ்பீக்கர்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?

நம்ப முடியாத கம்மி பட்ஜெட்டில் டால்பி விஷன் கொண்ட 12.1 இன்ச் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன், டால்பி அட்மோஸ் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10,000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம் மற்றும் 1.5 டிபி மெமரி கொண்ட போக்கோ பேட் 5ஜி (POCO Pad 5G) டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுவதால், ஆர்டர் அடிச்சு தூக்குகிறது. இந்த டேப்லெட் குறித்த விவரம் இதோ.

போக்கோ பேட் 5ஜி அம்சங்கள் (POCO Pad 5G Specifications): இந்த போக்கோ டேப்லெட்டில் 12.1 இன்ச் (2560 × 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) வருகிறது.

அவ்ளோதானா.. ரூ.20999 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 1.5TB மெமரி மாடல்!

இந்த பெரிய டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது. இந்த போக்கோ பேட் 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) வருகிறது. பட்டையை கிளப்பும் 5ஜி பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென்2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உள்ளது.

மிட்-ரேஞ்ச் போன்களில் வரும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டேப்லெட்டில் 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இந்த மெமரி மட்டுமல்லாமல், 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, 12.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட மொபைல் என்றே இந்த டேப்லெட்டை சொல்லலாம். இந்த போக்கோ பேட் 5ஜி டேப்லெட்டில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகிறது.

அவ்ளோதானா.. ரூ.20999 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 1.5TB மெமரி மாடல்!

டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கொண்டிருக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. பேக்கப் பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். இவ்வளவு பெரிய பேட்டரி கொண்டிருக்கும் 7.52 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது. அதேபோல, 568 கிராம் எடை கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டில் 5ஜி (5G), 4ஜி எல்டிஇ (4G LTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி வருகிறது. கோபால்ட் ப்ளூ (Cobalt Blue) மற்றும் பிஸ்தாகியோ கிரீன் (Pistachio Green) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை தொடங்கி இருக்கிறது. எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,999 பட்ஜெட்டில் இந்த போக்கோ பேட் 5ஜி மாடலை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
22 Percent Discount on POCO Pad 5G With 8GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X