செய்வீர்களா? Samsung-க்கு புது குடைச்சலை கொடுக்கும் சீன நிறுவனம்.. அதுவும் இந்தியர்களை நம்பி!

|

தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிற்கு (Samsung) ஏற்கனவே சீன நிறுவனங்கள் பல வகையான குடைச்சல்களை கொடுத்து கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில் சியோமி (Xioami) நிறுவனமானது, சாம்சங்கிற்கு ஒரு புது குடைச்சலை கொடுக்க தயாராக உள்ளது; அதுவும் இந்தியர்களாகிய நம்மை நம்பி!

அதென்ன குடைச்சல்?

அதென்ன குடைச்சல்?

அதாவது பட்ஜெட் போன்கள் முதல் பிரீமியம் போன்கள் வரை, வெவ்வேறு விலை பிரிவுகளின் கீழ், எக்கச்சக்கமான மாடல்களை அறிமுகம் செய்து, சரியான விலைக்கு தரமான போன்களை வாங்க வேண்டும் என்றால் - ஒரு சைனீஸ் போனை தான் வாங்க வேண்டும் என்கிற நிலைமை உருவாகி உள்ளது.

இந்நிலைப்பாட்டில், சியோமி நிறுவனமானது சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட் பிரிவையும் (Tablet Section) தாக்க உள்ளது!

"தூக்கி சாப்பிடும்" அம்சங்களுடன் தீயாக ரெடியாகும் சியோமி!

ஏற்கனவே ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் ஸ்மார்ட் டிவி (Smart TV) சந்தையில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் சியோமி நிறுவனம் டேப்லெட் (Tablet) பிரிவையும் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் கடந்த 2021 ஆம் ஆண்டில் Xiaomi Pad 5 மற்றும் Xiaomi Pad 5 Pro என்கிற 2 "வெயிட்டான" அறிமுகம் செய்தது!

தற்போது அந்த இரண்டு டேப்லெட்களையும் தூக்கி சாப்பிடும் அம்சங்களுடன் சியோமி நிறுவனத்தின் பேட் 6 சீரீஸ் (Xiaomi Pad 6 Series) டேப்லெட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தரமான சிப்செட்!

தரமான சிப்செட்!

சியோமி பேட் 6 சீரீஸின் கீழ் - வழக்கம் போல - 2 டேப்லெட் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். அவைகள் சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) மற்றும் சியோமி பேட் 6 ப்ரோ (Xiaomi Pad 6 Pro) ஆகும்.

அதில் வெண்ணிலா மாடலான Xiaomi Pad 6 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் (Qualcomm Snapdragon 870) ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது 7nm ஃபேப்ரிக்கேஷனை அடிப்படையாக கொண்ட ஒரு ப்ராசஸர் ஆகும்; சாம்சங் டேப்லெட்களின் முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படும் OPPO, Vivo மற்றும் Lenovo போன்ற நிறுவனங்களின் டேப்லெட்களில் இதே ப்ராசஸர் தான் காணப்படுகிறது.

இரண்டு டேப்லெட்களிலுமே 120Hz டிஸ்பிளே!

இரண்டு டேப்லெட்களிலுமே 120Hz டிஸ்பிளே!

Xiaomi Pad 6 டேப்லெட்டில் இடம்பெறவுள்ள Qualcomm Snapdragon 870 ஆனது,பழைய Xiaomi Pad 5 Pro மாடலில் உள்ள Qualcomm Snapdragon 860 உடன் ஒப்பிடும் போது, ஒட்டு பெரிய முன்னேற்றம் ஆகும். அதுமட்டுமின்றி Xiaomi Pad 6 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்பிளேவை பேக் செய்யும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

இந்த சீரீஸின் வெண்ணிலா மாடலே 120Hz டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதால் ப்ரோ மாடலும் கூட அதே ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் டிஸ்பிளேவுடன் தான் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடியாக போட்டியிடக்கூடும்!

நேரடியாக போட்டியிடக்கூடும்!

Xiaomi 6 Pro மாடலின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது Qualcomm Snapdragon 8+ Gen 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படலாம். இந்த ப்ராசஸர்ம் ஒரு டேப்லெட்டை அதிவேகமாக மாற்றும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மேலும் இது 1880 × 2880 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை வழங்கும் AMOLED டிஸ்ப்ளேவுடன் வெளியாகலாம். இது உண்மையாகும் பட்சத்தில், ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்ட சியோமி பேட் 5 ப்ரோ உடன் ஒப்பிடும் போது, இது மிகப்பெரிய மேம்படுத்தலாக இருக்கும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இது Samsung நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் (Samsung Galaxy Tab S8+) போன்றவற்றுடன் "நேரடியாக" போட்டியிடக்கூடும்!

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, சியோமி பேட் 6 ஆனது ரூ,25,000 என்கிற பட்ஜெட்டின் கீழ் வெளியாகலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடல் ஆனது, அதாவது சியோமி பேட் 6 ப்ரோ ஆனது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டை சுற்றிய புள்ளியில் - எங்காவது ஒரு இடத்தில் - அமரலாம்!

இது அதிகாரப்பூர்வமான விலை நிர்ணயம் அல்ல என்பதால், உண்மையான விலைகள் சற்றே முன்பின் இருக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டேப்லெட் என்றாலே, அது சாம்சங் நிறுவனத்தின் டேப்லெட்கள் தான் என்கிற இந்தியர்களின் எண்ணத்தை, இந்த சியோமி டேப்லெட்கள் மாற்றுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Photo Courtesy: Xiaomi

Best Mobiles in India

English summary
Xiaomi to launch Xiaomi Pad 6 and Xiaomi Pad 6 Pro Tablets Soon, Check Expected Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X