Xiaomi-க்கு Samsung மேல என்ன கோவமோ.. ஆளுக்கு 2 வாங்கும் விலையில் Pad 6 மற்றும் Pad 6 Pro டேப்லெட் அறிமுகம்!
டேப்லெட் வாங்கும் ஐடியாவே இல்லாதவர்கள் கூட, சியோமியின் இந்த 2 புதிய டேப்லெட்களை பார்த்தால்.. நிச்சயம் 'டெம்ப்ட்' ஆவார்கள். ஏனென்றால், சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) மற்றும் சியோமி பேட் 6 ப்ரோவின் (Xiaomi Pad 6 Pro) விலை நிர்ணயமும், அம்சங்களும் அப்படி!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமரா ஸ்மார்ட்போனான சியோமி 13 அல்ட்ராவுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 2 டேப்லெட்களுமே சாம்சங் (Samsung) மற்றும் லெனோவாவின் (Lenovo) கீழ் வாங்க கிடைக்கும் பல டேப்லெட்களை ஓரங்கட்டும் அளவிலான விலை நிர்ணயம் மற்றும் அம்சங்களை பெற்றுள்ளது.

சியோமி பேட் 6 மற்றும் சியோமி பேட் 6 ப்ரோவின் அம்சங்கள்: சியோமியின் இந்த 2 டேப்லெட்களுமே 30 ஹெர்ட்ஸ் முதல் 144 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (Touch Sampling Rate) உடனான 11-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
மேலும் இந்த இரண்டு டேப்லெட்களின் டிஸ்ப்ளேக்களுமே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன், எச்டிஆர்10, டால்பி விஷன் (Dolby Vision), ஹார்டுவேர்-லெவல் ப்ளூ லைட் ரிடெக்ஷன் (Hardware-level blue light reduction) மற்றும் டியுவி ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட் (TUV Rheinland low blue light) சான்றிதழ் போன்றவைகளையும் கொண்டுள்ளது.
சியோமி பேட் 6 ஆனது அட்ரெனோ 650 ஜிபியு உடனாக ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 870 7என்எம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள பேட் 6 ப்ரோவானது அட்ரெனோ நெக்ஸ்ட்-ஜென் ஜிபியு உடனாக ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 4என்எம் சிப்செட்டை பேக் செய்கிறது.
சியோமி பேட் 6 ஆனது 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. அதே நேரத்தில் ப்ரோ மாடலானது 8ஜிபி ரேம் உடனாக 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் உடனாக 256ஜிபி அல்லது 512ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. மேலும் இந்த 2 டேப்லெட்டுகளும் ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 14 மூலம் இயக்கப்படுகின்றன.
கேமராக்களை பொறுத்தவரை, பேட் 6 மாடலில் 13எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது. ப்ரோ மாடலானது 2எம்பி டெப்த் சென்சார் உடனாக 50எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது; இது 4கே தரத்திலான வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, பேட் 6-இல் 8எம்பி கேமராவும், பேட் 6 ப்ரோவில் 20எம்பி கேமராவும் உள்ளன.
இந்த இரண்டு டேப்லெட்களும் யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், குவாட் ஸ்பீக்கர்ஸ், நான்கு மைக்ரோஃபோன்ஸ், வைஃபை 6, ப்ளூடூத் 5.2 (ப்ரோ மாடலில் 5.3 வெர்ஷன்) போன்ற பொதுவான அம்சங்களை பேக் செய்கிறது. பேட்டரியை பொறுத்தவரை, பேட் 6-இல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 8840mAh பேட்டரி உள்ளது; பேட் 6 ப்ரோவில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 8600mAh பேட்டரி உள்ளது.
சியோமி பேட் 6 மற்றும் பேட் 6 ப்ரோவின் விலை மற்றும் விற்பனை: தற்போது வரையிலாக இந்த 2 டேப்லெட்களுமே சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைகள் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் (பிளாக், கோல்ட் மற்றும் மவுண்டன் ப்ளூ) விற்பனை செய்யப்படவுள்ளது.
சியோமி பேட் 6-இன் பேஸிக் ஸ்டோரேஜின் விலையானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.23,850 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, மறுகையில் உள்ள சியோமி பேட் 6 ப்ரோவின் ஆரம்ப விலை சுமார் ரூ.23,855 ஆக உள்ளது. இந்த இரண்டு டேப்லெட்களும் இந்தியா உட்பட மற்ற உலக சந்தைகளில் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவலை சியோமி இன்னும் வெளியிடவில்லை!


Click it and Unblock the Notifications








