வெளுத்து விட்டாப்ல.. ரூ.5,000 விலை கட்.. 11.3 இன்ச் டிஸ்பிளே.. 8000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. OnePlus மாடல்!
டேப்லெட் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.5000 விலை குறைப்பில் ஆர்டருக்கு வந்திருக்கும் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடலை தாராளமாக வாங்கி கொள்ளலாம். 11.3 இன்ச் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 8000mAh பேட்டரி, குவாட் ஸ்பீக்கர்கள் போன்ற பக்கா பீச்சர்களை கொடுக்கிறது. ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதை நீங்களே முடிவெடுங்கள்.
ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் வை-பை (Wi-Fi) மற்றும் 4ஜி (4G) கனெக்டிவிட்டி கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்கின்றன. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 1 டிபி மெமரிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

பெரிய டிஸ்பிளே கேட்கும் கஸ்டமர்களுக்கு இது பக்கா ஆப்ஷனாகும். ஏனென்றால், 2.4K ரெசொலூஷன் கொண்ட 11.3 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி இருக்கிறது.
பெரிய டிஸ்பிளேவாக இருப்பதால், கண்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) சப்போர்ட் வருகிறது. 7.5 எம்எம் பெசல் கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் டிஸ்பிளே மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் கோ இருக்கிறது. இதற்கு ஏற்ப ஆடியோவும் பட்டையை கிளப்புகிறது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோவுடன் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) பேக் செய்துள்ளது. ஆகவே, ஸ்டீரியோ மற்றும் வேரியேஷன் பக்காவாக இருக்கும். இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 33W சூப்பர்வூக் (SUPERVOOC) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் கொண்ட 8000mAh பேட்டரி வருகிறது. 514 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
இந்த பேட்டரி இருந்தும் 532 கிராம் மட்டுமே எடை கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) வருவதால், ஓரளவுக்கு லேட்டஸ்ட் யுஐ எதிர்பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் பட்ஜெட்டுக்கு ஏற்ப மீடியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கிடைக்கிறது.
ஈஎஸ்ஐ (EIS) சப்போர்ட் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவானது, 1080P வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 4ஜி மற்றும் வை-பை கனெக்விடிட்டிக்கு அடுத்தப்படியாக ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) சப்போர்ட் கிடைக்கிறது. ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் டூயல்-டோன் பாடி கொடுக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. இந்தியாவில் வெளியானபோது, இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் (Wi-Fi) விலை ரூ.19,999ஆக இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட (LTE) மாடலின் ரூ.21,999ஆக இருந்தது. 256 ஜிபி மெமரி (LTE) மாடலின் ரூ.23,999ஆக இருந்தது
இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் வை-பை மாடலுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதாவது, ரூ.3000 விலை குறைந்து ரூ.16,999 பட்ஜெட்டுக்கு ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பிலும், ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இது ரூ.5000 விலை குறைப்பில் கிடைப்பதாகும்.


Click it and Unblock the Notifications