Home
Social media

ரூ.16.5 லட்சம் மதிப்பில் நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்.! உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா?

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களை இணைக்கும் தளமாக மட்டும் இருந்த சமூகவலைத்தளம் இப்போது மெய் நிகர் மையங்களாகவும், மார்க்கெட்டிங் வணிகங்களை அணுகுவதற்கான தளமாகவும், வேலைகளை கண்டறியும் தளமாகவும் விளங்கி வருகிறது. அதேபோல் யூடியூப் தளத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் நாள்தோறும் வேலை செய்து கலைத்துப்போய் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில், அவர்கள் ரிலாக்ஸ் செய்ய உதவியாக இருப்பது யூடியூப் (YouTube) வீடியோக்கள் மட்டும்தான். சொல்லப்போனால், யூடியூப்பையும் நம்மையும் பிரித்து பார்க்க முடியாது என்றே சொல்லலாம்.

ரூ.16.5 லட்சம் மதிப்பில் நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்.!

குறிப்பாக முன்பு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்பட்ட யூடியூப் தளம், இப்போது நம் நாட்டில் லட்சக்கணக்கான யூடியூபர்களுக்கு (YouTuber)மாத சம்பளம் வழங்கும் முதலாளியாக உருவெடுத்துள்ளது. நீங்களும் யூடியூப் சேனல் (YouTube Channel) தொடங்கி பணம் சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.16.5 லட்சம் மதிப்பில் நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்.!

அதாவது அந்த யூடியூபர் பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது. இதனால் வேதனையில் இருந்த அவர் அடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார்.

இந்த நிலையில் சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று கருதிய அவர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்பின்பு நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார்.

அதேபோல் இந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் டிவி, சோபா, மெத்தை, பிரிட்ஜ், தலையணைகள் என அனைத்தும் உள்ளன. பின்பு இந்த வீட்டிற்கு வெளியே இது சார்லியின் வீடு என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீங்கள் எல்லோரும் உலகப் பொது மறையான திருக்குறள் படித்திருப்பீர்கள். அதில், மனப்பாடப் பகுதியில் நன்றி மறப்பது நன்றன்று என்று தொடங்கும் குறளை மனப்பாடம் செய்திருப்பீர்கள். இக்குறள் ஆறறிவு உள்ள மனிதப் பிறவிகளுக்காகத் திருவள்ளுவரால் எழுதப்பட்டது. ஆனால் ஐந்தறிவு உள்ள உயிரினங்களில் நன்றி மறவாத ஒரு உயிரினம் உண்டென்றால், அது நாய் மட்டும்தான்.

ரூ.16.5 லட்சம் மதிப்பில் நாய்க்கு வீடு கட்டி பரிசளித்த யூடியூபர்.!

அதேபோல் மனிதர்களை கடிப்பதற்காக நாய்களை படைக்கவில்லை. நாய்கள் குரைப்பது கடிப்பதற்காக அல்ல, பாதுகாப்பு, அன்பு,புரிதல், ஏக்கம், பாதுகாப்பு உணர்வு என அனைத்தும் அதில் அடங்கி இருக்கும். இதனைப் புரிந்து கொண்டால் போதும். அவற்றின் அன்பு நம்மை அரவணைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTuber built 16.5 lakh pet house for his dog with table, mini-fridge and TV : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X