யூடியூப்பில் அதிக டிஸ்லைக் பெற்று தெறிக்கவிட்ட வீடியோ.!
யூடியூப் வலைதளத்தில் டிசம்பர் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் ரீவைண்ட் 2018 வீடியோ, யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாக இருக்கின்றது.
யூடிப்பில் அதிக டிஸ்லைக் பெற்று தெறிக்கவிட்டதாக வீடியோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூப் வலைதளத்தில் டிசம்பர் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் ரீவைண்ட் 2018 வீடியோ, யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாக இருக்கின்றது.

12.7 கோடி பேர் பார்த்தனர்:
தற்போதுவரை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ள யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோவை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
டிஸ்லைக்:
சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். முன்னதாக யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ இருந்தது.

யூடியூப் ரீவைன்ட்:
யூடியூப் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவோ அதிக டிஸ்லைக் பெற்று இருப்பது குறிப்பிட தக்கது. நெடிட் பயன்படுத்துவோர் யூடியூப் ரீவைன்ட் வீடியோ பற்றி மீம்களை பதிவேற்றம் செய்து, இதனை டிஸ்லைக் செய்யக் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோ தீம் குறித்து:
யூடியூப் ளெயிடடதிலேயே மிகவும் மோசமான வருடாந்திர வீடியோவாக அமைந்திருப்பதாக கூறப்படுகின்றது. வீடியோவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் மீது பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்துடன்வீடியோவின் தீம் அதிகளவு செயற்கையாக இருக்கின்றது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர் கருத்து:
யூடியூப்பில் பிரபலங்கள் பார்க்கப்படும் மார்கியூஸ் பிரவுன்லீ, டெக்னிக்கல் குருஜி மற்றும் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வீடியோவின் துவகத்தில் தோன்றுகின்றனர். இதில் மேலும் பல பிரபலங்கள் இடம் பெறவில்லை என்று கூறப்படுகின்றது.

புதிய வரலாறு படைத்தது:
இந்த வீடியோவை பல பேர் டிஸ்லைக் செய்துள்ள நிலையில், புதிய வரலாறு படைத்துள்ளது என்று யூடியூப் நகைச்சுவையாக கருத்து வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications