இந்த மனசுதான் சார்: உயிரையும் காப்பாற்றிக் கொடுத்து பரிசுத் தொகையையும் கொடுத்த இளைஞர்- பரவும் வீடியோ

|

ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றியதோடு இதற்காக அவருக்கு கொடுத்த ஊக்கத் தொகையில் பாதியை அந்த குழந்தையின் படிப்புச் செலவுக்கே வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கவனம் தேவை

பெற்றோர்கள் பொது இடங்களில் குழுந்தைகளை கவனமாக அழைத்து செல்ல வேண்டும். குறிப்பாக இப்போது அனைத்து இடங்களிலும் வாகனங்கள் போக்குவரத்து சற்று அதிகமாக இருப்பதால் குழுந்தைகளை கவனமாக அழைத்து செல்ல வேண்டும்.

ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழுந்தை

ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழுந்தை

இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழுந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

சிசிடிவி கேமரா பதிவு

சிசிடிவி கேமரா பதிவு

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மண்டலத்துக்கு உட்பட்ட வாங்கனி ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதை ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடைமேடையின் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன்

நடைமேடையின் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன்

அதாவது வாங்கனி ரயில் நிலையத்தில் தனது தாயுடன் சிறுவன் ஒருவன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். அந்த சமயம் நடைமேடையின் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன், திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட, அப்போது மிக வேகத்தில் அதே தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.

விழுந்ததை கவனித்த ரயில்வே ஊழியர்

மேலும் சிறுவன் தண்டவாளத்தில் விழுந்ததை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர், ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன்னுயிரை பணயம் வைத்து ஓடிச் சென்று சிறுவனை நடைமேடையில் இருந்த தாயிடம் தூக்கிவிட்டு, உடனே தானும் நடைமேடை மீது ஏறி, தன்னையும் தற்காத்துக் கொண்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தார்.

சிறுவனையும் காப்பாற்றி, தன்னையும் தற்காத்து கொண்ட ஊழியர்

குறிப்பாக ரயில் அந்த இடத்தை கடந்து செல்ல ஒரு சில நொடிகளே இருந்த நிலையில் சிறுவனையும் காப்பாற்றி, தன்னையும் தற்காத்துக் கொண்டார் அந்த ரயில்வே ஊழியர். சரியான நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் ஒரு ரியல் ஹீரோ போல செயல்பட்டு தனது உயிரை பற்றிக் கூட கவலைப்படாமல், சிறுவனின் உயிரைக் காப்பற்றிய அந்த ரயில்வே ஊழியர் மயூர் என்பவரை பல்வேறு மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் இவரின் வீடியோ தற்சமயம் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

இணையதளத்தில் வைரலாக பரவிய வீடியோ

இணையதளத்தில் வைரலாக பரவிய வீடியோ

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் மயூரின் செயலை பாராட்டி வந்தனர். இந்த நிலையில் மயூரின் துணிவுச் செயலை பாராட்டி அவருக்கு ரயில்வே சார்பில் 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் அவருக்கு வழங்கப்பட்ட தொகையில் பாதியை அவரால் காப்பாற்றப்பட்ட குழந்தையின் படிப்புச் செலவுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அந்த குடும்பம் வறுமையில் இருப்பதை அவர் அறிந்ததன் காரணமாக இந்த முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

விழிப்புடன் இருத்தல் அவசியம்

விழிப்புடன் இருத்தல் அவசியம்

ரயில் நிலையத்தில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ரயில் வந்து நின்ற பின்பு ஏறுவது, இறங்குவது மிகவும் நல்லது. அதாவது சிலர் ரயில் நிற்பதற்கு முன்பே இறங்குவார்கள், இது மிகவும் ஆபத்தை உண்டாக்கும். அதேபோல் சிலர் ரயில் ஓரளவு வேகமாக செல்ல ஏறுவார்கள், இதனால் உயிர்போகும் ஆபத்துகள் கூட உள்ளது. எனவே இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Youngman Announced that he would give Half of the Prize Money to the Child he Saved

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X